Vallalar Universal Mission Orphange Homes
121.கரும சித்திகளை ஆள

121.கரும சித்திகளை ஆள


241. கருமசி திகளின் கலைபல கோடியும்

242. அரசுற வெனக்கருள் அருட்பெருஞ்ஜோதி


( உரைவிளக்கம்) உலகில் அதிகம் பரவியுள்ள கலைகள் அனைத்தும் கரும சித்தியின் விளைவேயாம். இக்கலைஞான விஞ்ஞான அறிவியற் சித்திகள் கோடி பல கோடியாக விரிந்து படர்ந்து கொண்டுள்ளன்வாகௌம். இவைகளையே மக்கள் தம் மருள் மயக்க விழைவால் திளைத்துக்கொண்டுள்ளனர். இக் கரும சித்தர்கள் மெய்யன்பாகிய தயவை அடிப்படையாகக் கொள்ளாது. பொய்ப்போக இச்சை வழியில் முனைந்து சென்று அடையப்பெறுகின்ற விந்தைச் சாதனங்களால் எல்லாம் பல வகையிலும் கேடே அடைந்து அழிவுறுகின்றார்கள் தயாநெறியில் முன்னேறினால், அறிவியற் சாதனங்களால் உலகைப் புத்தியில் இன்ப வாழ்வில் தழைக்கச் செய்வது சாத்தியமாம்.


நம் வள்ளற் பெருமான் வேண்டும் சித்தி, அருளால் வருவது. பல பிறவிகள் பல காலம் விடாது பயின்றறிய முடியாத பல கோடி கலா ஞானத்தையும், திருவருள் துணையால் ஒரு கணத்தில் முழுமையாகத் தெரிந்து கொள்வதோடு, அவ்வளவையும் நன்கு ஆளவும் கூடியவராகி விடுகின்றார். இதனைத்தான் இங்கு அருட்பெருஞ்ஜோதியிடத்து வேண்டுகின்றார். கரும சித்திகளின் பல கோடியும் அரசுற எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி என்கின்றார்.

தயவு சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்…..