Vallalar Universal Mission Orphange Homes
120. மூவகைச் சித்தியின் முடிவு 239. மூவகைச் சித்தியின்முடிபுகண் முழுவதும் 240. ஆவகை எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி

120. மூவகைச் சித்தியின் முடிவு


239. மூவகைச் சித்தியின்முடிபுகண் முழுவதும்

240. ஆவகை எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி


( உரைவிளக்கம்) சித்திகள் மூன்று வகை என ஈண்டு மொழியப்படுகின்றன. அருந்திறலால் செய்து முடிக்கும் செயல் சித்து எனப்படும். சித்தின் அனுபவமே சித்தி எனலாகும். இவண் அருளின் திறலால் அடையப்பெறும் சித்திகளையே குறிக்கின்றார். அருளியல் உண்மையை அறிந்துகொள்ளார் முயன்று அடையும் சித்திகள் சிற்பமானதாய் முடிவில் அழிவுறச்செய்வதாய் இருக்கும். அச் சித்தியை இச்சித்து அடையார் சுத்த நெறியினர்.


இனி சித்திகள் மூன்றுவகை யாவை எனப் பார்ப்போம். 1`. கர்ம சித்தி, 2. யோக சித்தி, 3. ஞான சித்தியாம். கர்ம சித்தியாவது, காயகற்ப முறையால் தந்திர உபாயச்செயல்களால் அடையப்பெறும் ஆற்றலும் சித்தியும் கடைமுறையானது. பொருமக்களால் பெரிதும் ஏற்கப்படக்கூடியதாம்,. யோக சித்தி, சாதாரண மக்கள் எல்லோராலும் பயின்று பெறமுடியாத பல சிக்கலும், இரகசியமும் உடையதாம். இதற்கு மேல் ஞான சித்தி, கலையறிவு , ஆன்மவிசாரம், உண்மையிடத்துப் பற்றுதலும், பொய்யினிடத்தில் பற்றற்றிருத்தலும், அகமுக பாவனையில் அழுந்தி நின்று விடுதலும் பிரம்மானுபவம் பெறச் செய்வதாம். இம்மூவகைச் சித்திகளில் நாட்டம் கொண்டு முயல்வதை விட்டு, அருள் நாட்டத்தோடு உளமுருகி வேண்டிக் திருவருளை அடைவதால் முத்திறல் வடிவாம், தூல, சூக்கும, காரண தேகத்தில் அருளாற்றல் வெளிப்பட்டு, கூர்மமாதி மூவகைச் சித்திகளையும் முழுமையாகப் பெறுதலும் கூடும். அகங்கார சித்தர்களின் சித்தி வகையால் வரவர ஆற்றல் குன்றி அழிவு உண்டாம். அருசித்தர்களுக்குத் திருவருள் துணையால் ஆற்றல் குன்றாது வளர்ந்து பெருகி வாழ்வருளும்.


ஆவகையாவது; ஆகும்வகை, உண்டாகும்படி எனலாம், ஆகையால், அருள்நெறியே ஆகுநெறி என்றும், கர்ம, யோக, ஞான, மார்க்கமெல்லாம் போகுநெறி என்றும் கொள்ளப்படும், நம் அடிகளார் திருவருட்பூரணத்தால், மூவகைச் சித்திகளின் முடிபுகள் முழுவதும் வழங்கப்பெற்று பெருவாழ்வு உண்டாகும்படி கருணைபாலிக்கப்படுகின்றார். அடுத்த வரும் அடிகளில் சித்தி விளக்கம் அதிகம் பெறுவோம்.

thayavu saravananandha