Vallalar Universal Mission Trust   ramnad......
பாரதியின் தீர்க்க தரிசனம்

பாரதியின் தீர்க்க தரிசனம்


பூமண்டலம் அனைத்துக்குமே புதிய விழிப்புத் தருவதற்கான முதல்வராக இராமலிங்கர் தோன்றினார் என்று பாரதியார் கூறுவது சிந்திக்கத்தக்கதாகும் இதனை,


அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்

திருந்த உலகர் அனைவரையுஞ்

சகத்தே திருத்திச் சன்மார்க்க

சங்கத் தடைவித் திட அவரும்

இகத்தே பரத்தைப் பெற்று

மகிழ்ந்திருதற் கென்றே எனை இந்த

யுகத்தே இறைவன் வருவிக்க

உற்றேன் அருளைப் பெற்றேனே:



என்னும் திருவருட்பாப் பாடலின் பொருளும் உறுதிப் படுத்துகின்றது. “ ஜெகமனைத்தையும் திருத்துவதற்காக , யுகமனைத்துக்கும் முதல் மகனான என்னை இறைவன் அனுப்பி வைத்தான் என்று வள்ளலார் கூறியதை பாரதியார் உறுதிப்படுத்துகின்றார். இவ்வளவு தெளிவாக இராமலிங்கரின் அவதாரச் சிறப்பைப் புரிந்து கொண்டவர்கள் பாரதிக்கு முன்னும் பின்னும் வேறவரும் இல்லை என்று சொல்லலாம்.