Vallalar Universal Mission Orphange Homes
பொறியியல் கல்லூரி மாணவிக்கு தேவை லேப் டாப் கம்ப்யூட்டர்….

பொறியியல் கல்லூரி மாணவிக்கு தேவை லேப் டாப் கம்ப்யூட்டர்….

30/10/2010 அன்று மாலை திரு இராமநாதன் தொழில் அதிபர் இராமநாதபுரம் மற்றும் திரு ஆசைத்தம்பி தொழில் அதிபர், இராமநாதபுரம் மற்றும் திரு பாஸ்கரன் தொழில் அதிபர், ஆகியோர் வள்ளலார் அறநிலையம் இராமநாதபுரத்தில் உள்ள ஆதரவற்ற , முதியோர், மாணவ மாணவியர்களுக்கு தீபாவளிக்கு தேவையான புத்தாடைகள் வழங்கினார்கள்.

மேலும் திரு இராமநாதன் அவர்கள், வள்ளலார் அற நிலையம் இராமநாதபுரம் மூலம் செய்யது அம்மாள் பொறியியற்கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் மாணவி செல்வி ஆதிலெட்சுமிக்கு, மூன்றாமாண்டுக்கு கல்விக்கட்டணத்தை செலுத்த முடிவு செய்துள்ளார் என்பது மகிழ்ச்சிக்குரியது. ஓராண்டுக்கட்டணம் சுமார் 40,000 ஆகும். தற்பொழுது செல்வி ஆதிலெட்சுமி இரண்டாமாண்டு பயின்று வருகின்றார். அவரது தாயார் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்டில் கடந்த பத்து ஆண்டுகளாக சமையல் வேலை புரிகின்றார். மேலும் அவர் பி. ஈ கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்று வருகின்றார். அவருக்கு தற்போதைய தேவை ஒரு லேப் டாப் கம்ப்யூட்டர்.