Vallalar Universal Mission Trust   ramnad......
உண்மை நெறி

உண்மை நெறி


உயிர்த்துயரம் ஐவகை; உணர்ச்சி மிகுந்த மெய் அழுகை ஐந்துவகை என்று குறிப்பிட்ட வள்ளலார் அந்த ஐந்து வகைகளையும் இந்த உலகத்து உயிர்கள் அறியாமலோ செயல் படாமலோ இருக்கவில்லை, செய்ய வேண்டியவைகளைத் தேர்ந்து அவைகளைச் செய்ய வேண்டிய முறைகளில் செய்யவில்லை என்பது மட்டுமன்று; செய்யக் கூடாதவைகளைச் செய்ய வேண்டியவைகளாக மாறுபட உணர்ந்து அமைத்துக் கொண்டவைகள்.


எனவே, மேலே குறிப்பிடப் பெற்ற ஐந்து நிலைகளிலும் உண்மையாம் நிலை அமைதல் வேண்டும்.


உண்மை செயல் செய்ய, அதனை உண்மை வழியில் செய்ய, உண்மை உயர்வை நாட, உண்மையை உண்மையாக உணரும் ஞானம் பெற , உண்மை இன்பம் துய்க்க என இவ்வாறு மேலே குறிப்பிடப் பெற்ற ஐந்து நிலைகளிலும் உண்மைத் தன்மையை நிலைநாட்ட வேண்டும்.


எனவே,ஐவகை உண்மை நிலைகளை எடுத்துச் சொல்ல வேண்டும் என விரும்பினார். பொய்யானவைகளையெல்லாம் மெய்யானவை என மாறுபட உணர்ந்து , பொய்யான வாழ்வில் கிடப்பவர்களுக்கு , அவர் தம் வாழ்வியல் நெறிகளுக்குரிய மெய்யான விளக்கம் தந்தார். அதுவே, வள்ளலார் மேற்கொண்ட தொண்டின் அடிப்படை.


சிதம்பரம் இராமலிங்கரின் சித்திவளாகம்

வை. இரத்தினசபாபதி……