ஐவகை அழுகை .. உயிர்த்துயரம்
வள்ளலாரின் தத்துவத் தோற்றம் அமைதற்குரிய சூழ்நிலையை நாம் நன்கறிதல் வேண்டும். தன்காலத்தில் தன்னுடன் உடனுறை மக்களைப் பார்க்கிறார் . ஐவகை அறியாமைகளைக் காண்கிறார்.
- செய்வகை அறியாது சில செயல்களைச் செய்கிறார்கள்.
- மெய்வகை தெரியாது பொய் நெறிகளையே மேற்கொள்கிறார்கள்.
- உய்வகை அறியாது உளறுவகை தேர்கிறார்கள்.
- மெய்யான ஒன்றை மெய்யான அறிவால் உணர அறியாது மயங்குகின்றனர்.
- மெய்யான ஒன்றை நுகர்ந்து மெய்யான இன்பம் பெறாது கெடுகின்றார்கள்.
எனவே, செய்வகை, மெய்வகை, உய்வகை, , மெய்யுணர்வகை , மெய் நுகர்வகை என்ற ஐந்தும் தெரியாமல் கெடுகிறார்கள். ஐவகைத் துயரம் என்று கணக்கிட்டுக் கூறி, ஐவகை, இவ்வுலகுயிர்த் துயரம் என்றும் கோழை உலக உயிர்த்துயரம் இனிப் பொறுக்க மாட்டேன் என்றும் கூறுவதையும் நோக்க வேண்டும்.
ஐவகை உயிர்த்துயரம் நீங்க ஐவகை அருட்செயலை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டி ஐந்தாம் பிள்ளையாகிய இராமலிங்கர் ஐவகையாக அழுதார் எனக் கொள்க,
சிதம்பரம் இராமலிங்கரின் சித்திவளாகம்
சித்திவளாகம்.டாக்டர் வை.இரத்தினசபாபதி
Write a comment