Vallalar Universal Mission Orphange Homes
தீபாவளி புத்தாடைகள்

தீபாவளி புத்தாடைகள்


இராமநாதபுரம் வள்ளலார் அறநிலையத்தில் உள்ள ஆதரவற்ற ,ஏழை, மாணவ மாணவியர் மற்றும் முதியோர்களுக்கு இராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரத்தில் உள்ள வல்லபை ஐய்யப்ப அறநிலையத்தினரால் தீபாவளி புத்தாடைகள வழங்கப்பட்டது. விழாவில் வல்லபை ஐய்யப்ப சேவை நிலைய நிறுவனர் தலைவர், திரு மோகன் சாமி, பொருளாளர் திரு ராஜசேகர், நிர்வாகிகள் திரு வீரப்பெருமாள், மற்றும் விழாவில் கலந்து கொண்ட பெரியோர்கள் முன்னிலையில் புத்தாடைகள் வழங்கப்பட்டன. மேலும் அன்றைய தினம் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. வல்லபை ஐய்யப்ப சேவை சங்கத்தினர் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இந்த ஆடை தானத்தை வள்ளலார் இல்லத்திற்கு வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏழை மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்குதல், மற்றும் ஆதரவற்றோருக்கான மருத்துவ உதவி இதுபோன்ற பல சமூக சேவைகளையும் மேற்படி ஐய்யப்ப சேவா சங்கத்தினர்கள் செய்து வருகின்றனர்.


வள்ளலார் அறநிலையம்

இராமநாதபுரம்