Vallalar Universal Mission Trust   ramnad......
விண்ணப்பங்கள்

விண்ணப்பங்கள்


இறைவனை சமய சன்மார்க்கிகள் குறிப்பிடும் பெயர்களால் அல்லாமல், சர்வ சமயத்தாரும் ஏற்கத்தக்க பொதுப்பெயர்களால் குறிப்பிட்டு வழிபட வகை செய்தார், அவ்வகையில், சன்மார்க்க விண்ணப்பங்கள் , என்ற புதுப் பெயரில் நான்கு விண்ணப்பங்களை வெளியிட்டார். அவை வருமாறு;


  1. சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பம்
  2. சமரச சுத்த சன்மார்க்க சத்திய பெருவிண்ணப்பம்
  3. சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்
  4. சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்

இந்த விண்ணப்பங்களிலே சன்மார்க்க அடியவர்கள், இறைவனை நோக்கி விண்ணப்பித்துக் கொள்ளுங்கால்;


“ தனித் தலைமைப் பெரும்பதியாகிய பெருங்கருணைக் கடவுளே

கருணாநிதியாகிய கடவுளே

களைப்பறிந்துதவும் கருணை கடலாகிய கடவுளே

சர்வ வல்லபராகிய தனித்தலைமை கடவுளே

எல்லாமாகிய தனிபெருந் தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே

இயற்கை யுண்மைக் கடவுளே

இயற்கை இன்பக் கடவுளே

என்பன போன்ற சமரச உணர்வை வெளிப்படுத்தும் பொதுப் பெயர்களால் சுட்டி, நம – ரூப பேதங்களை மறந்து கடவுளை வழிபடத் தூண்டினார்.


வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

திரு ம.பொ.சி