வள்ளலார் அறநிலைய மாணவ/மாணவியர் மற்றும் முதியோர்களுக்கு தீபாவளி புத்தாடைகள்.
வள்ளலார் அறநிலைய ஆதரவற்ற மாணவ மாணவியர்மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு தீபாவளிக்கு புத்தாடைகள் வழங்க இராமநாதபுரத்தில் உள்ள பஜாஜ் ஆட்டோ மற்றும் இருசக்கரவாகன ஏஜென்சி ஊழியர்கள் மற்றும் உரிமையாளர் வள்ளலார் இல்லத்திற்கே டெய்லரை அழைத்துவந்து தைப்பதற்கு அளவெடுத்துச்சென்றுள்ளார்கள். மேலும் ரெகுநாதபுரம் ஐய்யப்ப சேவா சங்கத்தினர் வள்ளலார் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் புத்தாடைகள் வழங்க உள்ளார்கள். மற்றும் இராமநாதபுரத்தைச்சேர்ந்த தொழிலதிபர் திரு இராமநாதன் அய்யா அவர்களும் தீபாவளி புத்தாடை வழங்க உள்ளார்கள்.
மேலும் இராமநாதபுரத்தை அடுத்துள்ள கீழக்கரை அரசு மருத்துவமனையில் எக்ஸ் ரே டெக்னீசியனாக வேலைபார்த்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற திரு கே. சுப்பிரமணியம் என்பவர் அவரது ஓய்வுபெறும் நாளன்று அரசு மருத்துவமனையில் ஒரு விழா ஏற்பாடு செய்து வள்ளலார் அறநிலைய முதியோர்களுக்கு உணவளித்து மேலும் வள்ளலார் அறநிலையத்திற்கு ரூ மூன்றாயிரம் நன்கொடை வழங்கியுள்ளார்கள் என்பது வரவேற்கத்தக்கது.
இன்றைய சூழ்நிலையில் ஒரு விழா என்றால் ஆட்டை வெட்டி, கோழியை வெட்டி மது அருந்துவது தான் அதிகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அப்படி இருக்கையில் மேற்படி அரசு அலுவலர் தனது பணி ஓய்வை வித்தியாசமானமுறையில் நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது.
மேலும் வள்ளலார் அறநிலைய மாணவ மாணவியர்களுக்கு வள்ளலார் அறநிலையம் சேஷாத்திரி மஹாலில் யோகாசனம் உயர்திரு ரவிசங்கர்ஜி அவர்களது அறக்கட்டளை மூலம் திருமதி நளினி அவர்கள் பதினைந்து நாட்கள் நமது வள்ளலார் அறநிலைய ஆதரவற்ற மாணவ மாணவியர்களுக்கு கற்பித்துள்ளார்கள. இலவசமாக.
பணம் இருந்தால் மட்டும் போதாது நல்ல மனமும் வேண்டும்...