Vallalar Universal Mission Trust   ramnad......
92. அன்பருக்குச் சுகம் தருவது


183. துன்பறுத் தொருசிவ துரிய சுகந்தனை

184. அன்பருக்கு கேதரும் அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அன்பர்களுக்குச் சுகமே தருகின்றாராம். ஆனால் இந்நாள் உலகில் அன்பர்களே அதிகம் துன்பச் சோதனையில் வாட்டப்படுஅதாகத் தோற்றுகிறது. இது ஏன் என்றால் அன்பர்கள் உண்மையில் தேக போகத்தில் பற்றற்று நிராசையோடு இருந்துகொண்டு, சூழ்நருக்கு உயிர் விளக்க ஆன்ம விளக்கப் பணிபுரிவதே தம் கடமையாகக் கொண்டு வாழ்ந்தால் எந்தவித சோதனையும் வாராது; புறத்திருந்து பார்ப்போருக்குச் சோதனைபோல் தோன்றினும் கூட மெய்யன்பர்களுக்கு நன்மையாகவே விளங்கும். உண்மை இப்படி இருக்க உலகில் அன்பர்களே மெய்யாகவே துன்புறுகின்றார்கள் என்றால், அதிலுள்ள குறைபாடு அந்த அன்பர்களின் முரணான நிலையே காரணம் என்று அறியலாகும். மெய்யன்பு நிறையுள்ளம் கொண்டு, அதனைச் செயல்படுத்தும் வாழ்வில் முனைந்தவர்களுக்கு எந்த விதத் தடையும் , கேடும், துன்பமும் உண்டாகாது, இதுவே கடவுள் மெய்யாணையாகும்.

மெய்யன்பர் புலபோக வாழ்வைப் பெரிய சுகமாகக் கருதவும் கொள்ளவும் மாட்டார்கள். அருட்பக்குவநிமித்தம் ஏற்படும் சிறு சிறு சோதனைச் செயல்களைத் துன்பமாக எண்ணி வீணில் கவலையும் , சஞ்சலமும் அடையமாட்டார்கள். அச சோதனைகளை மறுக்காது பணிந்தேற்று அன்புச் செயலில் இணைத்துவிடுவார்கள். இதனால் ஆண்டவர் அன்பருக்குத் தரும் சுகம் வெறுஞ் சுகமல்ல; துரிய சுகம் என்றும் அதுவும் சிவதுரிய சுகம் என்றும் குறிக்கப்படுகின்றது.

சுகம் என்பது பொதுவாக இன்பமேயாம். அந்த இன்பம் விழிப்புநிலையில் அனுபவப்படுவது சாக்கிரநிலையில், ஜீவ உணர்வில் கரணேந்திரிய வழியாக ஏற்படுவது இந்த இன்பம் உயிரின் இன்ப உணர்வுக்கு ஆதாரம் ஏன்மாவேயாம். ஒருவன் உடற்பற்றோடு கூடி வாழ்கின்றபோது அனுபவிக்கின்ற சுகமெல்லாம் சுத்தமானதல்ல மேலும் சாக்கிரத்தில் புற அனுபவமாய் விளங்கியும், சொப்பனத்தில் அக அனுபவத்தில் தோற்றியும், சுழுத்தியில் அருகி மறைந்தும் கிடக்கின்றதாம். உடற் பற்றொழிந்து , தன்னை ஆன்ம வடிவினனாக அறிந்து அந்நிலை யிற் பிறழாது வாழும் ஒருவனுக்குக் கிடைக்கப்பெறுவது ஆன்ம சுகமாம். இதற்குமேலாதான் குருநிலை என்னும் அருள் அனுபவத்தானம், தோற்றுவது,. ஓர் ஆன்மாவுக்குச் சுழுத்திநிலை முடிவல்ல தேகேந்திரியதிற்குச் சுழுத்தி முடிவாம். ஆகையால், ஆன்மானுபவ நிலைக்கேறியவன் சுழுத்தியில் ஒடுங்கியொழியாது, மேல் சுத்த ஆன்ம உணர்வோடு நிலவுகின்றான். இதுவே துரிய நிலையாம். துரியம் என்றாலெ சுத்தமான, தூய்மையான என்றே பொருள்படும், இந்நிலையில் இருக்கும்போது ஏற்படுகின்ற சலனமற்ற நினைப்பு மறப்பில்லாத அமைதியான உணர்வுதான் துரியானந்தாமக உள்ளதாம். இத்துரிய சுகத்தில் இருப்பவனுக்கு, இடமும் காலமும், சூழ்நிலையின் இருப்பும் தோற்றா ஆனால், இச் சுகானுபமோ ஜ்டலில் உயிர் விளங்கும் வரை இருந்து மறைந்து சூனியமாகிவிடுவதாம். ஆகையால், இத்துரிய சுகம் பெரிய சுகமல்ல, உண்மையில் ஆன்மா கடவுட் சிற்சொரூபமாய் இருக்கின்றதால், அதுவாம் மனிதனும் கடவுள் வண்ணனேயாவான், அப்போது அருள் உணர்வால் அல்லது குரு துரிய ஞானத்தால் , தான் ஆன்மா என்பது போய், தான் சிவன் அல்லது அருட்பெருஞ்ஜோதி வடிவினனே என உணர்கின்றான். இந்த நிலையே சிவ துரிய நிலையாக மொழியப்படுகின்றாது, இதில் விளைகின்றா இன்பமே சிவ துரிய இன்பமாக இங்கு குறிக்கப்படுகின்றதாம்.

மெய்யன்பருக்கே இந்த மேலான துரிய சுகந்தனை வழங்குகின்றார் நம் அருட்பெருஞ்ஜோதிபதி. மேலும் இவன், இத்துரியானுபவத்தை சுத்தசன்மார்க்க நிலை நின்று அனுபவிக்கின்றதால் அதற்கு அழிவுமில்லை, முடிவுமில்லையாம்,. இந்தச்சுகநிலை பெற்றோன் அதிலே அமிழ்ந்து மூழ்கிப்போவதில்லை. சாக்கிர, சொப்பனநிலை கடந்து சுழுத்தியும் தாண்டி மேல் துரியத்தில் தோய்ந்தும், மெய்யின்பானுபவம் கெடாது நித்திய விழிப்போடு விளங்குகின்றான். இந்நிலையையே சுத்த துரியாதீத அல்லது சாக்கிராதீத நிலை என்பர். இந்நிலையில் விளங்கும் இன்பம்தான் அழியாப் பேரின்பம் ஆகும். இவ்வின்பநிலையுற்றவர்களே எக்காலத்தும் எதனாலும் துன்பத்திற்குஆளாகார்கள். இது நம் அருட்பெருஞ்ஜோதி அன்பருக்கே தரும், துன்பமில்லா சிவ துரிய சுகப்பெரு வாழ்வாகும்.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்

vallalarspace.com