Vallalar Universal Mission Trust   ramnad......
75. ஐந்தொழில் ஐவர்க்கு அளிப்பது

149. முந்துறு மைந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும்

150. ஐந்தொழி லளிக்கும் அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) நம்முடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே தனித்தலைமைப் பெரும்பதியாக இருக்கின்றார். இவரே தம் அருட்பெருஞ்சக்தியை ஐஞ்சக்தி வண்ணமாகத் தோற்றுவித்துள்ளதுதான் முன்னடிகளில் குறிக்கப்பட்டது. அவ்வைஞ்சக்தியின் வெளியீடே இவ் அகண்ட பிரபஞ்சக் காரியப்பாடெல்லாம் என்பதும் நாமறிவோம் மேற்படி சக்திகளைக் கொண்டு விளங்குபவை சத்தர்கள் என முன்பே குறிக்கப்பட்ட்து. அந்தச் சத்தர்கள், சத்தி விளங்குமிடங்கள், முதலில் சூக்கும அணுநிலையாயிருக்கின்றன. அச் சூக்குமநிலை நின்று தூல தோற்றங்க கொண்டிலங்க வேண்டிப் பொருள்வடிவ ஆக்கலும், கிரியா செயலால் காத்தலும், உள் ஞானம் விளையப் புற அழிப்புச் செயலும், ஆன்ம சக்தி விளங்க யோகசித்தியும், இறையருள் விளங்க மெய்யின்பானுபவமும் வெளியாகின்றனவாம். எனவே சாதாரண அணு நிலையில் ஐஞ்சக்தி காரியப்பட்டால் யாவும் உண்டாகி மனிதப் பிறவியில் ஆன்மானுபவ ஆனந்தசித்தியாய்த் திகழ்கின்றதாம். இங்கு அச்சாதாரண அணுநிலையே ஆன்ம அணுவாக ஆகித் திகழ்கின்றதென அறிகின்றோம்.

அகவல் உரைவிளக்கம்

தயாநிதி சரவணானந்தா..

vallalarspace.com/vumt