
127. ஓதியோ தாமல் உறவெனக் களித்த
128. ஆதியீறில்லா அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) உறவு என்ற சொல், அடைதல், என்ற தொழிற்பெயராகும். சுற்றம், நட்பு, பொருத்தம் என்ற பொருள் உலக வழக்கில் காணப்படுகின்றன. இங்கு நாம் கடவுட் சம்பந்தத்தைக்கொண்டு பேரின்பில் வாழ வந்துள்ளோம். ஆதலின் நமக்கு அவருடைய உறவுதான் இன்றியமையாததாய் இருக்கின்றதாம்.அவரே நமக்கு எல்லா உறவுமாய் இருப்பதோடு, அருளின்ப வாழ்வுக்குச் சூழ வந்து உதவிக்கொண்டேயிருக்கின்றார்.
நமது அருட்பெருஞ்ஜோதி இறைவர், என்றென்றும் இருக்கின்றவர். அவருக்குத் தொடக்கமும் முடிவும் இல்லை. ஆதியீறில்லா அருட்பெருஞ்ஜோதியை நமது உண்மையான உறவாகப் பெற்றுள்ளோம். ஆனாலும், இவ்வளவு காலமாக இந்த இறை உறவு நமக்குப் புரியாமல், புரிந்து கொள்ள முடியாமல் இருந்துள்ளது. ஏனெனில் நமக்கும் கடவுளுக்கும் உள்ள உண்மைத் தொடர்பு, புலன் அறிவாலும், மனோ அறிவாலும், அறியக்கூடாததாய், அம்மனம் ஒடுங்கி, மோனநிலை நின்று உள் நோக்கிய போதுதான் அக்கடவுள் , எதனாலும், தீண்டறிய அகவெளியில் திகழ்வதாய் உணரப்பெற்றதாம். அப்படி உணரப் பெற்ற பதியை யுறுவது அடையப்பெறுவது எப்படி என்று தெரியாமல்தான், வேண்டியும், அழுதும், தொழுதும், உபாசித்தும் , தவங்கிடந்தும், முடிவில் பூரணப் புகல் அடைது, இரண்டறக் கலந்து ஒழிய நேர்ந்ததாம்., இம்முறைகளால் தான் ஓதியுணர்ந்து உறவெல்லாம் கூறிக் துதித்துத் துதித்து மனிதன் அக் கடவுளில் ஒன்றி மறைந்து போனதாகும்., உறவு கொண்டாடிப் பெற்றது என்ன? மறைவுற்றதே!
இப்போது நம் பதி அருட்பெருஞ்ஜோதியயா, வெளிப் பட்டுத் தானே யாவுமாய் ( உயிராய், பொருளாய், மனிதனாய்,) உள்ளதை, மெய்யருள் அறிவால் உணர்ந்து, அதுவாகவே புறத்திலிருந்து சென்று அடையாது இயல்பாகவே) விளங்கு கின்றோம், இந்நிலையே, ஓதாதுணர்ந்து உறாவுகொண்டு ஒழியாது திகழும் முறையாகும். இதுதான் நமக்கும் கடவுளுக்கும் இயல்பாகவே ‘ என்றும் விளங்கும் உறவுமுறையாகும். நமது கடவுளியல் உண்மையை அகமிருந்து அருளாலே ஓதாதே உணர்ந்துகொண்டு , அவ்வகநிலை பெயராது அனக அருள் வாழ்வு நடத்துவதே வள்ளல் வழங்கியுள்ள சுத்தசன்மார்க்கப் புது நெறியாம்.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்..
vallalarspace.com/vumt
Write a comment