
தங்கள் அறிவைத் தாங்களே மெச்சிக் கொள்கின்ற இந்தப் “ பகுத்தறிவாளர்” பற்றியும் வள்ளலார் விமரிசனம் செய்கிறார். அவர்களுடைய பொய் வாதத்தை நம்பவேண்டாவென்று தம் நெஞ்சினைக் கெஞ்சி கேட்டுக்கொள்ள்கிறார்.
“ எல்லா அறிவும் எமதறிவே என்றுரைக்கும்
பொல்லா வலக்காரர் பொய் உகேல்”
என்னும் பாடலே அதற்குச் சான்று.
“ பகுத்தறிவாளர் “ கள் ஒன்று சொல்லிக்கொள்வோர். “ ஒன்றே குலம்” ஒருவனே தேவென்” என்பதே தங்கள் தெய்வக் கொள்கை என்கின்றனர். இது, திருமூலரிடம் இரவல் பெற்ற கருத்தாகும் , வள்ளலர், திருமூலரின் உண்மைச் சீடர், ஏன் ?: திருமூலர் இயற்றிய திருமந்திரமே அவர் ஓதி வந்த வேதம். அதனால், ‘ ஒருவனே தேவன்’ என்னும் கொள்கை அடிகளாருக்கும் உடன்பாடே. பல தெய்வ நம்பிக்கையை மறுக்குமிடத்தின், ‘ மறந்தும் ;’ என்றல் நாவால் உரைக்கமாட்டேன் சிறு தெய்வ நாமங்களே” எனக் கூறுகின்றார். தெய்வம் பலப்பல சொல்லும் பொய் வாதத்தை.
“ பூவைவிட்டுப் புல்லெடுப்பார் போலுன் திருபாதந்
தேவைவிட்டு வெம்பிறவித் தேவர்களை – கோவையிட்டு
கூவுவார் மற்றவரைக் கூடியிடேன் கூடுவனேல்
ஓவுவா ராவ லுனை”
என்னும் பாடலில் மறுத்துரைக்கின்றார். இன்னும்,
“ வள்ளல் உனை உள்ளபடி வாழ்த்துகின்றோர் தமை
மதித்துடுவ தன்றிமற்றை
வானவரை மதி என்னில் நான் அவரை ஒருகனவின்
மாட்டினும் மறந்தும் மதியேன்
கள்ளம் அறும் உள்ளம் உறும் நின்பதம் அ லால் வேறு
கடவுளர் பதத் தை அவர் என்
கண் எதிர் அடுத்து ‘ ஐய’ நண் ‘ என அளிப்பினும்
கடுகவென வெறுத்து நிற்பேன்”
என்னும் பாடலில் , எல்லாம் வல்ல பரம்பொருள் ஒன்றையுன்றிப் பிறிதொரு தெய்வம் பேணாத நெறியைப் பேசுகின்றார்.
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
ம. பொ. சி.
vallalarspace.com/vumt
Write a comment