Vallalar Universal Mission Trust   ramnad......
தைப்பூசம் ஜனவரி 30 , 2010

கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டு தைப்பூசமும் வெகு சிறப்பாக இராமநாதபுரம் மாவட்ட தங்கல் மனை, @ வடலூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு மாவட்ட அன்பர்கள் , வெளிநாட்டு வாழ் தமிழர்கள், வந்து தங்கி உணவருந்திச்சென்றனர்.

28/01/2010 அன்று இரவே இராமநாதபுரத்தில் இருந்து கிளம்பி 29/1/2010 அன்று காலை வடலூர் சென்றடைந்தோம். 29/01/2010 முதலே வரும் வெளியூர் அன்பர்களுக்கு மூன்றுவேளையும் உணவு அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் அதிகளவில் மக்கள் தைப்பூச ஜோதி தரிசனத்தை காண வந்திருந்தனர். வழக்கம்போல் தைப்பூசம் அன்று காலையில் உணவுப்பொட்டலம் விநியோகமும், ஆதரவற்றோர் களுக்கு இராமநாதபுரத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட உடைகளும் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மேலும் நமது அன்னதானத்திற்குத் தேவையான காய்கறிகள் அனைத்தையும் தஞ்சாவூரைச்சேர்ந்த திரு இராமச்சந்திரன் , ஓய்வு பெற்ற வட்டாட்சியர் அவர்கள் வீட்டிலேயே சென்று பெற்றுக்கொண்டு அவரையும் தைப்பூசத்திற்கு அழைத்துச் சென்றோம். மேலும் தைப்பூச அன்னதானத்திற்கு அரிசி சுமார் 150 கிலோவினை ஈரோடு திரு பாண்டுரெங்கன் அய்யா அவர்கள் வழங்கினார்கள். தைப்பூசத்தன்று அவர்களே இராமநாதபுரம் தங்கல் மனையின் முன் இலவச சித்த வைத்திய முகாமும் நடத்தினார்கள். மேலும் சுவிட்சர்லாந்தைச்சேர்ந்த திரு கேத்தீஸ்வரன் அய்யாஅவர்கள் தைப்பூச அன்னதானத்திற்கு சுமார் 250 கிலோ அரிசி வழங்கினார்கள் கடந்த ஆண்டும் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தைப்பூசத்தன்று திருவருட்பா நூல்கள் விற்பனையும் இராமநாதபுரம் மாவட்ட தங்கல் மனையில் சிறப்பாக நடைபெற்றது. சில குறிப்பிட்ட நூல்களை சன்மார்க்க அன்பர்கள் விரும்பிக் கேட்கின்றார்கள் அந்நூல்கள் தற்பொழுது அச்சில் இல்லை என்பதால் வரும் அன்பர்கள் வருத்தத்துடன் செல்கின்றார்கள். உதாரணமாக தயாநிதி சரவணானந்தா அவர்கள் எழுதிய அகவல் உரைவிளக்கம் என்ற நூல்.

பெங்களூரைச்சேர்ந்த அன்பர் திரு கார்த்திகேயன் அவர்கள் இரக்கம் காட்டுங்கள் என்ற ஒரு ஆடியோ குறுந்தகடை வெளியிட்டார்கள். திரு இராமானுஜம் அய்யா அவர்கள் சத்தியஞான சபை தத்துவவிளக்கம் என்ற ஒரு வீடியோ குறுந்தகடினை வெளீயிட்டார்கள். மேலும் கோயம்புத்தூரைச்சேர்ந்த திரு பிரபாகரன் அவர்கள் சத்தியஞானசபை விளக்கத்தினை அப்படியே ஆயில் பிரிண்ட் செய்து அனைவருக்கும் இலவசமாக வழங்கினார்கள்.

தஞ்சாவூர் டாக்டர் திரு பி.கி. சிவராமன் அய்யா அவர்கள் இராமநாதபுரம் தங்கல் மனைக்கு வருகை தந்து திருஅருட்பா நூல்கள் பெற்றுச் சென்றார்கள். மேலும் கோயமுத்தூரைச்சேர்ந்த தயவு திரு இராமதாஸ் அய்யா ( கார்த்திக் பாலிமர்ஸ் உரிமையாளர்) அவர்கள் வருகை தந்திருந்தார்கள். மற்றும் சிதம்பரம் திரு வை.நமச்சிவாயம் அய்யா , பேராசிரியர் , அவர்கள் வருகை தந்திருந்தார்கள்.

தைப்பூசத்தன்று வரும் அன்பர்கள் அனைவருக்கு இராமநாதபுரம் மாவட்ட தங்கல் மனையில் அனைத்து வசதிகளையும் சிறப்பாக செய்து கொடுத்திருந்தோம்.

ஒவ்வொரு தைப்பூசத்திற்கும் இராமநாதபுரம் வள்ளலார் அறநிலையத்திற்கு பல்வேறு வகையிலும் உதவிடும் அன்பர்கள் , கோவையைச்சேர்ந்த திரு சிவக்குமார் தமிழரசி தம்பதியினர், தயவு பிரபாகரன் அவர்கள், சென்னையைச்சேர்ந்த திரு கோசலை ராமன் அய்யா அவர்கள், வளர்புரத்தைச்சேர்ந்த திரு ஏகாம்பவாணன் அய்யாஅவர்கள், தஞ்சாவூர் திரு இராமச்சந்திரன் அய்யா ( தாசில்தார் ஓய்வு) அவர்கள், இராமநாதபுரத்தைச்சேர்ந்த் ஓர் அன்பர், மற்றும் திரு பாலாமாமா அவர்கள், மண்டபம் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள், திரு இராமச்சந்திரன் அவர்கள் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அவர்கள், வண்டல் கிராமத்தினைச்சேர்ந்த திரு அர்ஜுனன் அய்யா அவர்கள், பரமக்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை சிவகாமி அவர்கள், பாளையங்கோட்டையைச் சேர்ந்த திரு செல்வம் அவர்கள், பரமக்குடி சன்மார்க்க அன்பர் திரு ஜிஆர் ரவிச்சந்திரன் , கூட்டுறவு சங்கம் அவர்கள்,இராமநாதபுரம் சன்மார்க்க அன்பர் திரு ரவிச்சந்திரன் , தோட்டக்கலைத்துறை, அவர்கள்,திரு இராமமூர்த்தி அவர்கள் , நில அளவைத்துறை இராமநாதபுரம் அவர்கள் ,மற்றும் திரு தெய்வசிகாமணி கிராம நிரிவாகஅவர்கள்,இராமநாதபுரம், திரு தெய்வச்சிலை கிராமநிர்வாக அதிகாரி ஓய்வு,அவர்கள்,உயர்திரு மாணிக்கம்பிள்ளை ,திரு கிருஷ்ணமூர்த்தி ,அவர்கள், இராமநாதபுரம் அவர்கள்,அனைவருக்கும் இராமநாதபுரம் வள்ளலார் அறநிலையம் சார்பாக பணிவான நன்றியினைத்தெரிவித்துக்கொள்கின்றோம்.

தைப்பூசத்திற்கு பல்வேறு வகையிலும் உதவிய, பொருளாலும் , உடலுழைப்பாலும் உதவி புரிந்த தயா நேய அன்பர்கள் அனைவருக்கும் இராமநாதபுரம் வள்ளலார் அறநிலையம் சார்பாக நன்றியினைத்தெரிவித்துக்கொள்கின்றோம்.


தயா

vallalarspace.com/vumt


2 Comments
gnani20
I knew Dr. Sirkali Sivachidamabaram performed on 30th Jan for the jothi darshan? Why is that not mentioned. is that by a different group?
Can you post a video clip?
Monday, February 8, 2010 at 06:44 am by gnani20
rajaveer jothimurugan
அய்யா
மேலே குறிப்பிட்ட நிகழ்வுகள் அனைத்தும்,இராமநாதபுரம் வள்ளலார் அறநிலையத்தினரால் பராமரிக்கப்படும் , வடலூரில் உள்ள, இராமநாதபுரம் மாவட்ட தங்கல் மனையில் மட்டும் நடைபெற்றநிகழ்ச்சி ஆகும் என்பதனை பணிவுடன் தெரிவிக்கின்றோம்.
தயவு
வணக்கம்
Monday, February 8, 2010 at 07:58 am by rajaveer jothimurugan