25. ஒளவிய மாதியோர் ஆறுந்தவிர்த்தபேர்
26. அவ்வியல் வழுத்தும் அருட்பெருஞ்ஜோதி
(உரைவிளக்கம்) திருவருளால் மனம் என்னும் பகுத்தறிவும் ஆற்றல் பெற்றதௌ மக்களினம்ம் இதனால் மனிதன் தன்னைச் சூழ இருக்கும் உலகுயிர்ப்பொருள்களைப் பற்றியும், ஆற்றல் இயக்கங்களைப் பெற்றியும், அகப்புற இயல்புகளைப் பெற்றியும் பலகாலமாக ஆராய்ந்து அரும்பெரும் உண்மைகளை அறிகின்றான். அப்படி அறியலான உண்மைகளில் சிறந்துதான் ஆன்மக்கடவுள் ஞானமாம். ஆதியில் இந்த ஞானம் முழுமையாக வெளிப்படவில்லை. மன உணர்வு புலன்வாயில் சென்று புற ஆராய்ச்சியில் இறங்கி, உழன்று கொண்டிருந்தது. உழலும்மனம் ஒருமையுற்று, அகமறைந்து கிடந்த உண்மை பல வெளிப்பட்டன. அவ்வெளிப்பாடுகளின் விளைவே ஆன்மக்கடவுள் தத்துவம். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இது வெளியாகிவிட்டது.
ஒருமை மனதால் உட்கூடி உலைவற்றிருந்த மனிதனுக்குப் பேராற்றல் கிடைத்தது. அவ்வாற்றல் சாதாரண மனித தரத்திற்கு மேற்பட்ட தெய்வீகத்தன்மை கொண்டதாயுணர்ந்து அதனை அக ஆன்ம சக்தி என்றும், கடவுள் அருள் விசேட சக்தி என்றும் போற்றிக்கொண்டனர் ஆன்றோர். அவ்வகப் பெருஞ்சக்தியின் உண்மையை மனத்தூய்மையின் அளவுக்குத்தகவே கண்டுகொள்ளப்பட்டது. மனத்தூய்மை என்பது மாசு நீங்கி , தேசு என்னும் இறையருட்டன்மை சார்ந்த நிலையாம் , அருள் ஒளியாம், கடவுள் தேசை மறைத்துள்ளது மருள் இயல் அவா முதலிய மாசாம். சுத்த அன்பு அல்லது தயவு பெருகப் பெருகத்தான் ஆண்டவரின் அருளியல் உண்மை வெளிப்பட்டு நிறைவு பெற உள்ளது.
நிறை அன்பு சேரா இறை ஞானம் குறை ஞானமாகவே இருந்து வந்தது. இப்பொழுது அன்பால் அருள் உண்மை வெளிப்பட்டு, ஆண்ட்வர் விளக்கம் அருட்பெருஞ்ஜோதி ஆகக் கண்டு போற்றிக் கொள்ளப்படுகின்றது. இதனையே அவ்வியல் வழுத்தும் அருட்பெருஞ்ஜோதி எனப்படுகின்றது. அவ்வியல் என்றால், அகர உண்மை கொண்ட கடவுளின், மெய்யறிவின்ப அருட்பெருந்தன்மையாகும். இப்படி அருட்பெருங்கடவுளை கண்டு போற்றுகின்றவர்கள் யார் என்றால், அவர்கள் தாம் ஒளவியம் ஆதி ஆறும் தவிர்த்த பேர்களம. ஒளவியமாவது பொறாமை என்ப, இது மாச்சரியமாகவும் உரைக்கப்படும். இது காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் எனப்படும் ஆறின் ஈற்றில் உள்ளது. இவை ஆறும் மருள்நிலையில் உட்பகையாக, உண்மை கண்டுகொள்ளத் தடையாக, அருள் உண்மை ஞானத்திற்கு இடையூறாக இருப்பனவாமிந்த அகப்படை ஆறை யும் வெல்லற்கு , ஆறியல் இறையைச் சாருதல்வேண்டும். அவ்வறு குண இறைவனைப் பகவன் அல்லது ,பகவான் என்பர். பசு வனின் இயல் ஆறாவன, வீரியம், ஞானம், செல்வம், புகழ், ஈசுரத்தனை, அவாவின்மை ஆம். இவை ஆறும் மூலமுதல் ஆறு ஆதாரத்தெழும் சக்திகளாம். இவற்றின் பயன் யோகானுபவசித்தியில் ஏகதேசம் விளங்குவதேயாம். சுத்த சன்மார்க்கியின் அனுபவம் மேனிலையில் ஆறியல் அருட்பெருஞ்ஜோதியினால் மட்டும் கைகூடும். நம் சுத்த நெறிக்கு ஜீவதயவே அடிநிலையாய் இருக்கின்றதால், அந்தத் தயவினால் ஞானக் கண்ணைத் திறப்பித்துக் கொள்ள வேண்டியது முதன்மையாகும். தயா ஞானம் உண் டாகிச் செயல் படும்போது பொறாமை என்னும் ஒளவியமாதி ஆறும் அகல்வது அனுபவே. முன் ஞானியர்க்கு இந்த அருளனுபவம் மேனிலை நின்று உண்டாகாததால், மருட்போத கீழா தார அனுபவத்தால் ஆறியல் கடவுள் உண்மை உள்ளவாறு கண்டடைய முடியாதிருந்தது. அனுபவ்வமெல்லாம் சமய மத யோகானுபவ எல்லையுட் குறுகிக்கிடந்ததாம். இத்தருணம்தான் சுத்த சன்மார்க்கத்தால் அருட்பெருஞ்ஜோதியைப் போற்றிப் பெரும் பயன் அடைகின்றோம்.
அகவல் உரைவிளக்கம்
சுவாமி தயாநிதி சரவணானந்தா
…தொடரும்…
vallalarspace.com/vumt
Write a comment