Vallalar Universal Mission Trust   ramnad......
5. இகபரத்தின் மேற்பொருள்

5. இகபரத்தின் மேற்பொருள்

9. ஈனமின்றிகபரத் திரண்டின்மேற் பொருளாய்

10.ஆனலின் றோங்கிய அருட்பெருஞ்ஜோதி

(உரைவிளக்கம்) தூல, சூக்கும நிலை கொண்டிலங்கும் இக பரப்பொருள்கள் யாவும், என்றும், ஈனமின்றி, அதாவது குறைவில்லாது நிறைநிலையாகவே பொருந்தியுள்ள ஒரு முதல் நிலைதான் நம் அருட்பெருஞ்ஜோதி நிலையாம். இந்த உயர் நிலையையே முன் குறித்தத் தூல சூக்குமமாம் இரு நிலைக்கும் காரணமாயுள்ளதால், இதனை மேற்பொருளாய், பரம்பொருளாய் உணர்கின்றோம். இப்பரம்பொருள் நிலையிலதானே யாவும் செறிந்து நின்று மேல் விளைவு கொண்டு இலங்குகின்றனவாம்.

பரம்பொருள் நிலையே பரமாகாச இறைநிலை என்றும் இயம்பப்படும். இவ்வாகாச நிலையே இங்கு ஆனல் என்று குறிக்கப்படுகின்றது. அகண்டவெளி நிறை ஆகாசநிலை நின்ற எப்பொருளும்உதித்திலங்அக்க் காண்கின்றோம். திருவருள் ஞானத்தால் இன்று நாம் பராமாகாசப் பரம்பொருளுண்மையை நம் ஆன்ம சிதாகாசத்தில் இருந்து கண்டு கொள்ளுகிறோம். ஆகவே இந்த அகண்ட பரமாகாச நிலையைத்தான் ஆனல் என ஓதியுள்ளார் நம் வள்ளற் பெருமான். இவ்வாகாச நிலையே யாவற்றிற்கும் முழு முதற்காரணமாய் அமைந்து என்றென்றும் இக பரப் பொருள்களை எல்லாம் தோற்றுவிக்கின்றது.

இன்றைய உலகில் எத்தனை வித உயிரினங்களை பொருள்வகைகளை ஆற்றல் இயக்கங்களை, மற்றும் பலவற்றை எல்லாம் காண்கின்றோம் ! இவ்வளவும் முதலில் எப்படித் தோன்றின என்பதைத் தெரிந்துகொண்டால், விதை முந்தியா மரம் முந்தியா? முட்டை முந்தியா குஞ்சு முந்தியா ? உயிர் முந்தியா உடல் முந்தியா ? என்பன போன்ற புதிர் வினாக்களுக்குச் சரியான விடை காண முடியும். ஆதி அந்தம் இல்லா அனாதி பரம்பொருள் தான் எல்லாத் தோற்றங்களுக்கும் முதற் காரணமாயுள்ளது என்று அறிதல் வேண்டும். அந்தப் பரம்பொருள் ஒன்றே எல்லாமாம் அருட்பெருஞ்ஜோதி ஆக, அகண்ட வெளி நிறை சிற்றணு தோறும் பரிபூரணமாகவே பொருந்தி, நின்று, தனது உண்மையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றதாம். இதனால் தான் , அந்தக் காரண பரமாகாச நிலையில் சுரந்து நின்றா இறையுண்மை வெளிப்படுத்துகின்றபோது முதலில்,சூக்கும நிலையும், பின்னர் தூல தோற்ற நிலையுமுறுகின்றதாம் .இந்நிலை ஒவ்வொரு சிற்றனுவிலும் அமைந்திருப்பது, இவ் அணு அக இறையுண்மை அனகமுறுவதால் , புறத்தே பொருட்சத்தி, கிரியா சக்தி, ஞான சக்தி , யோக சக்தி, அருட் சக்தி வெளியாகின்றனவாம். இவற்றில் பொருட் சக்தியால் பூத அணுத்தோற்றமும்,. அணுக்களால் ஆம் பொருட்களின் தோற்றமும் அமைகின்றன. அப்பூத அணுவினின்று கிரியா சக்தி வெளியாவதால் எல்லா இயக்கங்களும், உயிர் ஆற்றலும் வெளியாகின்றன. உயிருணர்வினுள் அறிவு விளக்கம் ஏற்பட்டு அகத்தே தெளிவு ஏற்படுகின்றது. அகத் தெளிவிலே பக்குவ ஞானம் உண்டாக உண்டாகக் கரும, பக்தி, ஞான யோகப் பயன் விளைகின்றது. அந்த யோக நிலைக்கப்பால், தான் அருள் உண்மை வெளிப்பட்டு கடவுட் பேரின்பம் அடையப் பெறுவதாம். இவ்வருட் பெருநிலை அடைவின் பொருட்டே இவ்வுலகில் சகலமும் ஒரு நியதிப்படி வெளியாக்கப்படுகின்றன. இந்த உலகம் முதலில் சடபூதப் பொருள்மயமாய்த் தோற்றி உயிராற்றல் வெளியாய தருணம் அவ்வுயிர்ச்சக்தியைச் சூழப் பலவாகிய உயிரின வடிவ தோற்றங்கள் ஏற்படுகின்றன. இது , உயிரினங்களின் முதல் தோற்ற நிலை. பின்னர் உயிரினவிருத்தி, சேர்க்கை முறையால் பல்கிப் பெருகிக் கொண்டுள்ளனவாம். வேறு விதமாகக் குறிப்பதாயின், சூக்குமமாயிருந்த அணுவகத்தோற்ற நிலை குறிப்பிட்ட உயிர்ச்சக்தியாகக் காரியப்படும்போது புறத்தே அவ்வுயிர் விளக்கத்துக்குரிய தேக வடிவம் உருவாகிப் பின்னர் ஒவ்வொரு உயிரினத்தின் பிற்சந்தியும் விருத்தியாகியுள்ளனவாம். ஆகையால் முதலில், சூக்கும நிலையில் விதைதரு மரமும், முட்டையின் உயிரும், மக்களைப் பெறும் தாயும், ஞானனந்த அனுபவத்தைத் தரும் இச்சிறந்த மனிதப் பிறப்புத் தேகமும் உண்டாயினவாக அறியலாகும். இம்முறையே எல்லாத் தோற்றமும் வளர்ச்சியுமாம். இதன் நிறை விளக்கம். சிறந்த நாள் என்ற நூலில் காண்ம ..2 உயிர்களின் வரலாறு பக்க 5- 20.

அக நின்று செய்லபடுத்துகின்ற இறையருள் உண்மையை உள்ளவாறு அறியாக் காரணத்தால் இந்த உலக உயிர்களின் தோற்ற காரணத்தைப் பலவாறு கற்பனை செய்து கூறிக்கொண்டுள்ளனர் மக்கள் . உயிர்க்கு உடல் வருவது ஆணவ மாயா கன்ம மலத்தால் என்கிறார்கள். கடவுள் சங்கல்பம் என்கிறார்கள். உண்மைய் யாதெனில் எல்லாமாம் அருட்பெரும்பதியே தன் உண்மை வெளிப்பட்டு இயற்கை இன்பானுபவ நிலை விளங்கவே தனது பேரருளைத் தானே இவ்வுயிருடம்பாய் விரித்து விளங்கச் செய்கின்றனர் என்பதுதான் உண்மை. இவ்வுண்மையறியாது, தேகானுபவநிலையினின்று தன்னையும், கடவுளையும், உலகையும் தனித்தனியாகக் கொண்டு நோக்கித் தடுமாற்றம் அடைந்து கொண்டுள்ளான் அபக்குவி, ஆனல் ஆகிய அருளம்பரத்தே நித்த நிறைவாகி, ஈனமின்றி விளங்கிக் கொண்டு, இகபரத்தை எல்லாம் தோற்றி விளங்கச் செய்து கொண்டிருப்பவர் நம் அருட்பெருஞ்ஜோதிபதியே என்பதை அறிந்து போற்றி அடைந்து மகிழ்வோம்.

தொடரும்......

சுவாமி சரவணானந்தா

vallalarspace.com/vumt