வடலூர் இராமலிங்கம், பிள்ளைப் பருவத்திலேயே சித்தர்கள் பாடல்களில் சிந்தையைப் பறிகொடுத்தார், நூற்றுக்கணக்கான பாடல்களைத் தம்மை மறந்து பாடும் வகையில் மனனம் செய்து வைத்திருந்தார். சித்த மார்க்கமே சிறந்ததென்பது அவருடைய நம்பிக்கை.
இறைவனருளால் இறவா வரம் பெற்ற பின்னர், அட்டமா சித்திகள் புரியும் ஆற்றல் பெற்றிருந்தார் இராமலிங்கர். அந்த ஆற்றலையும் இறைவனே தமக்கு அளித்ததாக அவர் கூறுகின்றார்.
“ அருட்பெருஞ் சோதியைக் கண்டேனே
ஆனந்தத் தெள்ளமு துண்டேனே
இருட்பெரு மாயையை விண்டேனே
எல்லாம் செய் சித்தியைக் கொண்டேனே”
சுத்த சன்மார்க்க மருந்து – அருட்
ஜோதி மலையில் துலங்கு மருந்து
சித்துருவான மருந்து – என்னைச்
சித்தலாஞ் செய்யச் செய்வித்த மருந்து
சித்தெலாம் வல்ல திறல் அளித் தெனக்கே
அத்தன் என் றோங்கும் அருட்பெருஞ்ஜோதி
சித்திகள் அனைத்தையும் தெருவித் தெனக்கே
சத்திய நிலைதனைத் தயவினில் தந்தனை
சித்தாடுகின்ற னன் சாகா வரமுஞ் சிறக்கப்பெற்றேன்
இத்தாரணியில் எனக்கிணையா ரென்று இயம்புவனே”
மானினைத்த அளவெல்லாங் கடந்தப்பால் வயங்கும்
மலரடிகள் வருந்துயிட மகிழ்ந்து நடந் தருளிப்
பானினைத்த சிறியேன் நான் இருக்குமிடத் தடைந்து
பணைக்கவதந் திறப்பித்துப் பரிந்தழைத்து மகனே
நீநினைத்த வண்ணமெல்லாம் கைகூடும் இது ஓர்
நின்மலம் என் றென்கைதனில் நேர்ந்தளித்தாய் நினக்கு
நான் நினைத்த நன்றிஒன்றும் இலையே நின் அருளை
நாயடியேன் என்புகல்வேன் நடராஜ மணியே!
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
ம.பொ.சிவஞானம்…..
vallalarspace.com/vumt
தனக்குள், அருட்பெருஞ் ஜோதியின் ஆற்றலைக் கண்ட பின்னர், வள்ளலார் சுவாமி அவர்கள் அனைத்தையுமே இறைவனின் சொரூபமாகக் கண்டுள்ளார்.
Monday, December 21, 2009 at 05:07 am
by hariharan_82
Write a comment