ஆருத்திரா தரிசன விழா அழைப்பிதழ்
ஆருத்திரா தரிசனம் இராமநாதபுரத்தில் இருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது திரு உத்திரகோசமங்கை அங்குள்ள அருள்மிகு மங்களநாதர் ஆலயத்தில் (மிகவும் பழமையான சுமார் நான்காயிரம் ஆண்டுகள் பழமையான நடராஜர் ஆலயம்) திருவாதிரை அன்று ஆருத்திராதரிசனம் கொண்டாடப்படுகின்றது.
அன்றைய தினம் வள்ளலார் அறநிலையத்தாரால் ஒருநாள் அன்னதானம் வழங்கப்படுகின்றது( காலை பத்தி மணியிலிருந்து இரவு பத்தி மணி வரை) .
ஆருத்திரா தரிசனத்திற்கு முன்பாக திருக்கோயிலில் உழவாரப்பணி மேற்கொள்ளப்படும் மூன்றுதினங்கள். இந்ததிருப்பணி கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வள்ளலார் அறநிலையம் செய்து வருகின்றது.
இந்த ஆன்மநேயப்பணிக்கு அன்பர்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யலாம். உழவாரப்பணியில் கலந்துகொள்ளலாம். உழவாரப்பணியில் கலந்து கொள்ளும் அன்பர்களுக்கும் வள்ளலார் அறநிலையத்தாரால் உணவு வழங்கப்படும். மேற்கூறிய ஆருத்திரதரிசன விழாவிற்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருநாள் உள்ளூர் விடுமுறை விடப்படுகின்றது. மேலும் அன்றைய விழாச்சிறப்புப்பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
தொடர்புக்கு :rajaveerjothimurugan@gmail.com
