சன்மார்க்க சங்க மதிப்பு
சன்மார்க்க சங்கத்தைக் குறித்து அடிகள் கொண்டிருந்த பெருமித உணர்வைப் பின்வரும் பாடல்கள் காட்டும் .
கொள்ளை என இன்பம் கொடுத்தாய் நினதுசெல்வப்
பிள்ளை என எற்குப் பெயர் இட்டாய் – தெள்ளமுதம்
தந்தாய் சமரசசன்மார்க்கசங்கத் தேவைத்தாய்
எந்தாய் கருணை இது .
ஆனந்தானுபவம்
சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத்
தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்த சபா பதியை
நன்மார்க்கத் தெனை நடத்திச் சன்மார்க்க சங்க
நடுவிருக்க அருளமுதம் நல்கிய நாயகனைப்
புன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான
பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை
அன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய்
அருட்பெருஞ்ஜோ தியை உலகீர் தெருட்கொளச்சார் வீரே
மரணமிலாப் பெருவாழ்வு
ஓவா துண்டு படுத்துறங்கி உணர்ந்து விழித்துக் கதைபேசி
உடம்பு நோவா துளமடக்கா தோகோ நோன்பு கும்பிட்டே
சாவா வரமும் சித்தியெலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க
சங்க மதிப்பும் பெற்றேன் என் சதுர்தான் பெரிதென் சரித்திரத்தை
ஆவா நினைக்கில் அதிசயம் என் அப்பா அரசே அமுதே என்
ஆவிக்கினிய துணையே என் அன்பே அறிவே அருட்சோதித்
தேவா இது நின் செயலே இச் செயலை நினைக்குந் தோறும் எனது
சிந்தை கனிந்து கனிந்துருகித் தெள்ளார் அமுதம் ஆனதுவே .
இறை இன்ப குழைவு
சன்மார்க்க சங்கத்தே இறைவன் தன்னை வைத்தான் என்றும் , சன்மார்க்க சங்க நடுவிருக்க அருளமுதம் நல்கினான் என்றும் , சன்மார்க்க சங்க மதிப்பைப் பெற்றேன் என்றும் அடிகள் கூறுவதால் சன்மார்க்க சங்கத்தின் மதிப்பு எத்தகையெதென்பதை அறியலாம் .
வடலூரிலும் கூட பூச விழாவின் போது, அமைதியின்மைதான் தென்படுகின்றது.
சுற்றிலும், ஆரவாரம் தவிர்த்து, வள்ளலார் சுவாமி சொல்லியது போல் அமைதியாக நடைபெற்றால்
இன்னும் சிறப்பாக இருக்கும்.