மூவகைச் சித்து
இராமலிங்க அடிகள் “ ஆடுறு சித்திகள் அறுபத்து நான்கெழு கோடியும் விளக்கும் அருட்பெரும் பொருளே” என்ற அருட்பா வரிகளில், “ சித்துக்கள் அறுபத்து நான்கெழு கோடி” என்கின்றார்.
பொதுவாகச் சித்திகளை 1) கரும சித்தி 2) யோகசித்தி 3)ஞான சித்தி என மூன்று வகையாகத் தொகுக்கின்றார் இராமலிங்க அடிகளார் இதனை
“ மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
ஆவகை எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி
கருமசித்திகளின் கலைபல கோடியும்
அரசுற எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி
யோகசித்திகள் வகை உறுபல கோடியும்
ஆக என் றெனக்கருள் அருட்பெருஞ்ஜோதி
ஞானசித்தி யின் வகை கள் விரி வனைத்தும்
ஆனியின் றெனக்கருள் அருட்பெருஞ்ஜோதி “
என்ற ‘ அருட்பெருஞோதி அகவல்’ வரிகளால் அறிகிறோம்.
பொதுவாக “ அட்டமா சித்தி” என்பதே வழக்கு இதனை, “ அட்டமா சித்திகளும் நினது ஏவல் செய்யும்” என்ற அருட்பா வரியில் இராமலிங்க அடிகளாரும் ஒப்புக்கொள்கின்றார்.
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
ம.பொ.சிவஞானம்…..