Vallalar Universal Mission Trust   ramnad......
திருவடிப்புகழ்ச்சி பாடல் வரிகள் 22..

திருவடிப்புகழ்ச்சி பாடல் வரிகள் 22..

`(22) பகரநந் தாநந்தம் அமலம் உசி தம்சிற்

பதம்சதா நந்த சாரம்,

(ரை) பகர் அநந்த ஆநந்தம் சொல்லப் பெறுகிறா அளவிலாத இன்ப அமைவு; அமலம் அழுக்கு ( ஒரு சிறிதும்) அமையாதது; உசிதம்- தனிப்பெரும் தகுதியது; சித்பதம் =- ஞானபதம் ஆனது; சதா ஆநந்த சாரம் எப்பொழுதும் இன்பப் பிழம்பாக இருப்பது( று)

(வி-ரை) மக்கள் இன்பம் பல ஒன்று கூடியது, கந்தர்வ இன்பம், கந்தர்வ பலர் இன்பம் ஒன்று சேர்ந்தது. தேவ யாழோர் இன்பம் தேவ யாழோர் பலர் இன்பம் ஒன்று தொக்கது, பிதிர்த்தேவதை இன்பம், பிதிர்த்தேவர்கள் பலர் இன்பம் ஒருங்கு சேர்ந்தது. வைதிக கன்ம தேவ இன்பம்; இதைவிட உயர்ந்தது தேவர்களின் இன்பம்,. பல தேவர்கள் இன்பம் ஒருங்கு பரிணமித்தது இந்திரர் பலர் இன்பம் ஒன்று சேர்ந்தது பிரகஸ்பதி இன்பம்’; பிரகஸ்பதிகள் பலர் இன்பத்தினும் உயர்ந்தத்து பிரஜாபதி இன்பம், இதைவிட உயரந்தது சிவலோகப் பிரமாநந்தம்’; என்று அற்புத தைத்திரிய உபநிடதம் அறிவிக்கின்றது இந்த இன்ப அனுபத்தை,

பந்தம் பறியப் பரிமேற் கொண்டாந்தந்த

அந்தம் இல்லா ஆநந்தம் பாடுதுங்காண் அம்மானாய்”

என்று திருவாசகமும் தெரிவிக்கும். இவைகளை பகர் அநந்த ஆநந்தம்’ என்று, பழைய மறைகளை பாடுவது அற்புதமாக இருக்கிறாது அல்லவா.,

அந்த இன்ப சொரூப பரம், இயற்கை செயற்கை அழுக்குகள் என்றும் இயையாதது ஆகலின், அமலம் என்று அறி விக்கப் பெறுகிறது.

எக்காலத்தவரும் எக் கொள்கையவரும் ஏற்கும் தாமுளது ஆதலின் உசிதம்’ என்று உணரப்பெறும்.

சித் ஆகுமாறு பதப்படுத்துவது சிற்பதம் ( சித் ஞானம்) ஞானசாரமே அதன் சொரூபம். ( பதம் பக்குவம்)_ பதவி எனினுமாம்.

புண்ணியம் மிகுந்தவழி மிகுந்து, பாவம் மிகுந்தபோது குறைந்தும் போகாமல் என்றும் ஒரு படித்தாயிருப்பது எதுவோ அதுவே சதாஆனந்த சாரம்’ இதை சத் ஆநந்த சாரம் எனப் பிரித்துப் பொருள் கொள்ளலும் தகும்.

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

உலப்பிலா ஆநந்தம் ஆய

தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த

செல்வமே! சிவபெருமானே!

எனும் திருவாசம், இங்கு நினைவிற்கு வருகிறாது. சதா ஆநந்த சாரம்; சத் ஆநந்த சாரம்’ சாரமான சதாநத்தம் என்றெல்லாம் பிரித்துப் பொருள் கொள்ள இடமுண்டு.

தொடரும்..

திருவருட்பா திருவடிப்புகழ்ச்சி.

குகத்திரு இரசபதிஅடிகள் உரை..

vallalarspace.com/vumt