Vallalar Universal Mission Trust   ramnad......
மண்கட்டி கதை

மண்கட்டி கதை

“ஜீவகாருண்யம் என்றால் உயிருள்ள ஜீவர்களிடத்து கருணை காட்டுவது” என்றே எல்லோரும் பொருள் கொள்வர். வள்ளலாரைச் சுற்றியிருந்த சீடர்களும் அப்படித்தான் கருனர். அவர்களுக்கு ஒரு நாள் வள்ளலார் உபதேசித்தாவது:

“மக்களிடத்தும் மாக்களிடத்தும் கருணை காட்டுவதோடு ஜீவகாருண்யம் முடிவுபெற்றுவிடாது: அது இன்னும் பரந்து செல்வது. உதாரணமாக ஒரு கதை சொல்லுகிறேன் கேளுங்கள்!

அன்பர்களே! இரு முதியவர்கள் ஒரு வீதி வழியே சென்றுகொண்டிருந்தனர். அப்பொழுது அவருள் ஒருவரின் கால்பட்டு வீதியிற் கிடந்த ஒரு மண் கட்டி உடைந்து போயிற்று. அதைக்கண்ட மற்றவர் உடனே மூர்ச்சையானார். மூர்ச்சையடைந்த அவருக்கு உபசாரங்கள் செய்து மூர்ச்சையைத் தெளிவித்து முன்னையவர், தாங்கள் மூர்ச்சையுற்ற காரணம் என்னை? என வினவ , அதற்கு அம்முதியவர் உம்முடைய காலினால் அவ்வழகிய மண்கட்டி உடைந்து உருக்குலைந்து போனதே காரணம் எனக் கூறினார்.

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

.பொ.சிவஞானம்..

vallalarspace.com/vumt