கேணியிலே எறிந்த பணம்
வள்ளலார் தம் அற்பத் தேவைகளுக்காக ஒன்றிரண்டு மெய்யன்பர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடமட்டுமே உதவி பெற்றார் என்று அறிகின்றோம். அவர்களும் தேவைக்க்கு அதிகமாக வற்புறுத்திப் பொருள் தந்தபோது மிகுதியான பொருளைக் கிணற்றிலேயும் குளத்திலேயும் எறிந்துவிடுவார். இதனை.
“ பணத்திலே சிறிதும் ஆசை ஒன்றி லை; நான்
படைத்த அப்பணங்களைப் பலகால்
கிணற்றிலே எறிந்தேன்; குளத்திலும் எறிந்தேன்
கேணியில் எறிந்தனன் எந்தாய்!
குணத்திலே நீதான் கொடுக்கின்ற பொருளை
எறிகலேன்’ கொடுக்கின்றேன் பிறர்க்கே!
கணத்திலே எல்லால் காட்டும் நின் அருளைக்
கண்டனன் இனிசொல்வ தென்னே!
“அருளினை அளிக்கும் அப்பனே உலகில்
அன்புளார் வலிந்தெனக் கீந்த
பொருளினை வாங்கிப் போனபோ தெல்லாம்
புழுங்கிய புழுக்கம் நீ அறிவாய்!
மருளும் அப் பொருளைச் சாலகத் தெறிந்து
மனமிக இளைத்தும் பொருளால்
இருளுறும் எனநான் உளம் நடுங்கியதும்
எந்தைநின் திருவுளம் அறியும்!
என்னும் பாடல்களில் அவரே கூறுகின்றார். இறுக்கம் இரத்தின முதலியார் என்பவர் தம் இளமை தொட்டே அடிகளாரிடம் அன்பு பூண்டவர். அவர் செல்வர் அல்லர். சென்னை நகரில் ஏதோ ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து அதிலே கிடைத்த சொற்ப வருவாயைக்கொண்டு குடும்பம் நடத்தியவர். அடிகளார் தம் அற்பத் தேவைக்குச் சில சமயம் அவருடைய உதவியையே நாடியதுண்டு. அவ்வகையில் அடிகளார் வடலூரில் முகாம் அமைத்த பிறகு, இறுக்கம் இரத்தின முதலியாருக்கு எழுதிய கடிதங்களில் காணப்படும் சில பகுதிகளை இங்குப் பார்ப்போம்!
“ அசலார் யாராவது இவ்விடம் வருகின்றவர்களிடத்தில் ஒன்று அல்லது இரண்டு லாங்கிளாத்து பீசு வாங்கி அனுப்பினால் அதன் கிரயத்தைப் பின்பு செலுத்திவிடலாம்.
தொடரும்;….