Vallalar Universal Mission Trust   ramnad......
திருவடிப்புகழ்ச்சி பாடல் வரிகள் 21 (21) பரமபோ தம்போத ரகிதசகி தம்சம் பவாதீத அப்ரமேயம்

திருவடிப்புகழ்ச்சி பாடல் வரிகள் 21

(21) பரமபோ தம்போத ரகிதசகி தம்சம்

பவாதீத அப்ரமேயம்

(-ரை) பரம போதம் மிகத் தெளிந்த தெளிவுமயம்; போத ரகித சகிதம் தெளிந்த தெளிவிற்கும் எட்டாமல் உடன் இருக்கும் உறவுமயம்; சம்பவ அதீதம் தோன்றும் தோற்றங்கட்கு எல்லாம் தூரமயம்; அப்பிரமேயம் - )( முன்னின்று) அளவிட முடியா முழுமை மயம் (-று)

(வி-ரை) நின்றசிவம் ஒன்று; அதனைத் தேர்தல் ஞானம் ; நிகழ்போதம் தேர்த்தனைத் தெளியலாம்’ என்று கடவுள் மாமுனிவர் கருதியபடி, போதம் என்பது, ஆய்ந்து, அறிந்தவற்றில் அரிய தெளிவு பெற்று அமைதல், எனவே, அதிரகஸ்யமான தெளிவுமயமே பரமபோதம்

முதன்மைத் தெளிவுடையேம் எனும் முனைப்புறின், அம் முனைப்பில் இருந்து அகன்று, உணர்த்த உணர்வில் மட்டும் உறவு பூண்டுள பரம். போந ரஹித சகிதம்’ எனப்பெறும். ( சம்பவம்- (புதையல் பொருள் போல் மறைந்து) தோன்றுவது.

சாதனைச் சார்பிலாதார் நிலை, வெறும் கோரணியான குழப்பக் கூத்து, அவர்கட்கு இது ஒரு எச்சரிக்கை போலுளது அல்லவா. தன்னிழப்பை என்ன கற்று சாதிப்பான்” என்பத் ஒழிவிலொடுக்கம் பிரமேயம் அளவிட்டறிவது; -இன்மை எனவே அப்ரமேயம் என்பது,. அளவிட முடியா அளவினது எனும் பொருட்டு.

vallalarspace.com/vumt