பெயர் நித்யா வயது 6 ஊர் இராமநாதபுரத்தை அடுத்துள்ள ஒரு சிறிய கிராமம். நித்யாவின் தாயார் மனநிலைபாதிக்கப்பட்டவர். அவருக்கு ஒரு குழந்தை அந்தக்குழந்தையை அவரது பாட்டி இராமநாதபுரத்தில் தினசரி காய்கறிகளை கொண்டு வந்து வியாபாரம் செய்பவர். இந்தக்குழந்தையையும் தன்னுடனேயே அழைத்து வந்து காய்கறி விற்பனை செய்யும் இடத்தில் காலையில் இருந்து சாயங்காலம் வரை உடன் வைத்திருப்பார். அவரது கடை இராமநாதபுரம் சேதுபதி நடுநிலைப்பள்ளி வாயிலில் உள்ளது ( கடை என்றால் கிராமத்திலிருந்து காய்கறியை எடுத்து வந்து விற்பனை செய்வது )இதை அறிந்த சேதுபதி பள்ளி ஆசிரியைகள் அந்தக்குழந்தையை அழைத்துக்கொண்டு வள்ளலார் இல்லத்திற்கு வந்து இந்தக் குழந்தையை படிக்கவையுங்கள் என்ற்கேட்டுக்கொண்டனர் உடனே அந்தக் குழந்தையை அதே பள்ளியிலேயே ஒன்றாம் வகுப்பில் சேர்த்து தற்பொழுது வள்ளலார் இல்லக் குழந்தைகளுடன் நித்யாவும் பள்ளி சென்று வருகிறார்.
மேலும் ஆகார்ஷ் என்ற ஒரு சிறுவனும் வயது 5 கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வள்ளலார் அறநிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். இராமேஸ்வரம் கோயில் வாயிலில் அமர்ந்து உணவுக்கு வழிதேடியவர்களை டெலிபோன் துறையில் வேலை செய்யும் அய்யா திரு ஜோதிமுருகன் அவர்களின் நண்பர் திரு இராமமூர்த்தி(இராமேஸ்வரத்தில் டெலிபோன்துறையில் பணியில் உள்ளவர்) என்பவர் மூலம் வள்ளலார் இல்லத்தில் சேர்க்கப்பட்டு தற்பொழுது பள்ளி சென்று வருகிறார். (மேற்படி சிறுவனும் அவரது தாயாரும் இராமேஸ்வரம் கோயில் வாயிலில் ஒருவாரத்திற்கும் மேலாக உணவுக்காக அமர்ந்திருந்தார்கள் )