வள்ளலார் அறநிலையம் இராமநாதபுரத்தில் வள்ளலார் அவதார தினவிழா மிக எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. காலை ஒன்பது மணி முதல் மதியம் ஒரு மணிவரை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. அதில் சுமார் 30 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.
அதில் இருவரை வள்ளலார் அற நிலையம் இராமநாதபுரம் சார்பில் கண்புரை அறுவை சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
,மேலும் கலந்து கொண்டவர்களுக்கு மதிய உணவு அளிக்கபட்டது.
பார்வையிழப்புத்தடுப்புச்சங்கத்தின் மேலாளர் திரு.பாலகிருஷ்ணன் தலைமையில் மேற்படி கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. மாலை அகவல் பாராயணம் செய்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
மேலும் இன்றையதினத்தில் நடைபெற்ற முக்கியநிகழ்ச்சியாக வள்ளலார் இல்லத்தால் பராமரிக்கப்படும் சுமார் 75 நபர்களுக்கு தீபாவளிக்கு புத்தாடைகள் இன்று வழங்கப்பட்டது.( மதிப்பு சுமார் இருபதாயிரம்)
அதை இராமநதாபுரத்தில் உள்ள ஓர் அன்பர் மற்றும் அவரது நண்பர்கள் மூன்றுபேர் வழங்கினார்கள். ஓர் அன்பர் என்பவர் தனது பெயரை சொல்ல விரும்பமாட்டார் (ஆடம்பரத்தை விரும்பாதவர் தனது பெயரில் ரசீது கூட போட விரும்பாதவர். அதாவது ஓர் அன்பர் என்று குறித்தால் போதும் என்று கூறிவிடுவார். ) இந்தசேவையை இவர்கள் பலவருடங்களாக செய்து வருகின்றார்கள். அவர்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணையால் மேலும் எல்லா நலன்களும் பெற பிரார்த்திக்கின்றோம்.
வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்-வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்-பெட்டிமேல் பெட்டிவைத்தாள்கின்றீர் வயிற்றுப்-பெட்டியை நிரப்பிக்கொண் டொட்டியுள் இருந்தீர்-பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்-பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்-எட்டிபோல் வாழ்கின்றீர்கொட்டிபோல் கிளைத்தீர்-எத்துணை கொள்கின் றீர் பித்துலகீரே..
என்று இல்லாமல் ஜீவகாருண்யத்தை வளர்ப்போம்…வீண் ஆடம்பரத்தை தவிர்ப்போம்.. வீண் வாதம் செய்வதை தவிர்ப்போம்.. தற்பெருமையை ஒழிப்போம். எளிமையாக இருப்போம்….உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமலிருப்போம்..
மேலும் வடலூரிலும் இராமநாதபுரம் மாவட்ட தங்கல் மனையில் வள்ளலார் அவதார தினத்தை ஒட்டி அன்னதானம் வழங்கப்பெற்றது..