Vallalar Universal Mission Trust   ramnad......
திருவடிப்புகழ்ச்சி பாடல் வரிகள் 13

(13) பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம்

பதித்துவ பரோப ரீணம்

(பதவுரை) பரிபவ விமோசனம்-துன்பத்தை (அடியொடு) தொலைப்பது; குணரகிதம் (ஆன்ம) குணங்கள் மூன்றற்கும் அப்பாற்பட்டது; விசுவம் பதித்துவ பர உபரீணம்- தலைமைத் தகுதியை உலகில் தாங்கி நிற்பது,

(வி-ரை) இயல்பில் துன்பம் இல்லாதது எதுவோ அதுவே வேதனைப் பிறவியை வேரறுப்பது. இதுவே பரிபவ விமோசனம் எனப்பெறுகின்றது> (பரிபவம்- பெரும் கவலை, மோசனம் அழிவு வி/பிரிவு)

இராஜசம் , தாமசம், சாத்விகம் எனும் முக்குணங்கள் முறைமுறை மாறிமமறி வரும்’ அவைகளால் விளையும் கவலைகட்கு அளவேயில்லாஇ. பிரமனிடத்தில் உள்ளும் புறம்பும் இராஜசம், அகத்தில் தாமசம், புறத்தில் சத்துவம் உடையவர் திருமால். உளத்தில் சத்துவர், புறத்தில் தாமசர் குணங்கொண்டே மூவரும் முத்தொழில் செய்கின்றனர். மூவரில் இருந்து முத்தொழில் நிகழ்த்தி, அவரவர் குணங்களில் ஒன்றாதது ஆதலின், குணரகிதம் என்றார்.

தானாக நிற்றல், சத்துவகுணம், இராகத் துவேஷ சம்பந்தம் உடையது இராஜசம், சோம்பலாதி ஜீவ இம்சைக்கு இடனாவது தாமசம்” என்பது வள்ளலாருடைய ஆறாம் திருமுறையில் உள்ள வசனப் பகுதி.

விசுவரூபமாய் விரிந்து, விசுவாந்தயாமியாய் விளங்கி, விஸ்வாதிகமாகி உயிர்கட்கு உதவி அவைகளை உயர்த்துவது ஆகலின், விசுவம் பதித்துவ பரோபரீணம்’ எனப் பெற்றது./ ( விஸ்வம் உலகம் பதித்வம் தலைமைத்வம், பரம் மேலிடம், உபரீணம் =உயர்த்துவது)

திருவடிப்புகழ்ச்சி,

குகத்திரு இரசபதி அடிகள் உரை.

vallalarspace.com/vumt