(10) பரமலோ காதிக்க நித்தியசாம்ப் ராச்சியம்
பரபதம் பரம சூஷ்மம்
(பதவுரை) பரமலோக ஆதிக்கம் – அகில உலககங்களையும் (தன் ) ஆணையில் வைத்து அருள்வது; நித்திய சாம்பிரச்சியம் – மாட்சியான ஆட்சியை (நலமுற) எந்நாளும் நடத்துவது; பரபதம் – மேதகு நுட்பமான மேல் நிலையது; பரம சூட்சுமம் – நுண்மையிலும் மிகுந்த நுண்மையானது(எ-று)
(வி-ரை) உலகங்கள் பலவுள, அவைகளை வள்ளலார், “: உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்” எனும் நிறைவான பாசுரம் கொண்டு நினைவூட்டியுளர். அந்த அருமையை வசனப் பகுதியில் அறிக. நியதி விளைய அவ்வுலகங்களை நிர்வகித்தலின் ,’ பரம லோகாதிக்கம்’ என்றார்./ (லோகம்-அகலிடம்-கன்கட்குக் காணப் பெறுவது. லுக் – பகுத்) லோகம் – ஆமுபெயராய், ஆருயிர்கள் அனைத்தையும் அறிவித்தது எனலும் ஒருவகை, எவரையும் எவைகளையும் தன் அருளாணையின் மூலம் காத்தலின் . ‘ ஆதிக்கம்’ என்றார்.
அந்த ஆதிக்கத்தொடு, நித்திய சாம்பிராஜ்யம் நிகழ்கிறது. சாம்பிராஜ்யம் – சம்பிரமமான ஆட்சி சம்பிரமம் – மாட்சியான ஆட்சியின் மலர்ச்சி, ஐம்பெரும் தொழில் ஆட்சியை, நலமுற எங்கும்நடத்துகிறது என்பது குஇப்பு
பரபதம்- (சாலோக சாமிப சாருபம் கடந்த) சாயுஜ்யப் பேறு பதம் – வழி எனினுமாம்.
நுண்மையினும் அதி நுண்மையானது ‘ பரசுட்சுமம்’
“ நோக்கரிய நோக்கே! நுணுக்கரிய நுண்ணுணர்வே” என்று திருவாசககும்,’ நுணுகாது நுண்னியான்’ என்று ஆதியுலாவும் அறிவிப்பது இங்கு எண்ணத்தகும்.
திருவருட்பா திருவடிப்புகழ்ச்சி.
குகத்திரு இரசபதி அடிகள் உரை//