திரு அருட்பிரகாச வள்ளலாராகிய நம் இராமலிங்கப் பெருமான், சன்மார்க்க சங்கத்தாருக்குப் பெரும் தயவோடு பின்வரும் அறிவுரைகளை வழங்கினார்கள்:-
“ சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியம் உயிர் இரக்கம், ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை, இதற்கு சாதி சமய மத உலகியல் ஆச்சாரங்களால் உருவாகும் வன்கொடுமை விருப்பு வெறுப்புக்களே – சங்கற்ப விகற்பங்களே-முக்கிய தடைகள். வீண்பேச்சு, ஆடம்பரம், இவைகளை அறவே கைவிட்டு உயிர் இரக்கத்தையே முக்கிய லட்சியமாகக் கொள்ள வேண்டும்”
“ காலம் தாழ்த்தாது எல்லா உயிரையும் தன் உயிர்போல பார்க்கின்ற பாவனையை வரவழைத்துக் கொள்ள வேண்டும் இந்தக் குணம் வந்தவன் எவனோ அவனே கடவுள். அவனே இறந்தவர்களை எழுப்புவான்.
வள்ளலார்
Write a comment