1) அன்பு என்ற சங்கிலியால் அகப்படுவது அருட்ஜோதி என்பதை உணர்த்த சபையைச் சுற்றி சங்கிலி ஒன்றை அமைத்தார்கள்.
“ பக்தி வலையில் படுவோன் காண்க”
“ அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே”
2) அதை அடுத்து இடையிடையே அறிவு வடிவான வேற்படையின் குறியுள்ள இரும்பு கம்பிகளுடன் கூடிய 52 கட்டைகளும் ஓம் என்ற மூல மந்திரத்துடன் கூடிய அகாராதி க்ஷகாராந்தமாகவுள்ள மாத்துருகா மந்திரங்களை உணர்த்துகின்றன.
3) முகப்பில் உள்ள மூன்று வாயில்களும் அருட்பெருஞ்ஜோதியை யடைவதற்குச் சாதங்களாகவுள்ள கர்ம யோகம், பத்தியோகம், ஞானயோகம் என்ற மூன்று யோகங்களையும், அதை அடுத்துள்ள இரு சாளரங்கள் பாசஞானம் பசுஞானம் என்ற இரு ஞானங்களையும் உணர்த்துகின்றன.
4) அகவல் மண்டபத்தின் இருபக்கங்களில் கிழக்கும் மேற்கும் உள்ள வாயில்கள் பரஞானத்ஹ்டையும் அபர ஞானத்தையும் அறிவிக்கின்றன.
5) அகவல் மண்டபத்திலேயுள்ள நான்கு சாளரங்களும் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடுதல் என்ற நான்கின் வழியாக உட்பொருளை உணரவேண்டும் என்று உணர்த்துகின்றன.
6) அதனை அடுத்துள்ள திருமண்டபத்தில் மேற்புறம் விளங்குவது சிற்சபை ( வெள்ளியம்பலம்) கீழ்ப்புறத்தில் விளங்குவது பொற்சபை ( பொன்னம்பலம்) வடபுறம் தென்முகமாகத் திகழ்வது ஞானசபை ( அறிவுமண்டபம்) என்க.
7) ஞானசபையைத் சூழ்ந்துள்ள நீராழிப்பத்தி என்ற பிரகாரத்தில் உள்ள இருபத்திரண்டு வளைவுகளும் அதனையடுத்து இருபுறத்தும் உள்ள பக்கவழிகள் இரண்டும் சேர்ந்த இருபத்து நான்கையும் ஆன்மதத்துவம் இருபத்துநான்கு என அறிக.
மண்,நீர், தீ, காற்று, வெளி …பூதங்கள் 5
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.,…தன்மாத் திரைகள் 5
மெய், வாய், கண், நாசி, செவி,…..ஞானேந்திரியங்கள் 5
வாக்கு, பாணி, பாதம், பாயு, உபத்தம்….கன்மேந்திரியங்கள்.5
மனம், புத்தி, அகங்காரம் ..அந்தக்கரணங்கள்.3
குணம்,,,1
ஆக ஆன்ம தத்துவங்கள் 24
8) நீராழிப் பத்தியில் உள்ளடங்கியுள்ள ஏழுவாயில்களும் வித்யா தத்துவங்கள் ஏழையுங் குறிக்கின்றன,
வித்யா தத்துவங்கள்
காலம் வித்தை மூலப்பகுதி
நியதி அராகம்
கலை புருடன்
9) ஞானசபையின் தென்புறத்துள்ள கண்ணாடிக் கதவுகளுடன் கூடிய மூன்று வாயில்கள், ஞாயிறு, திங்கள், நெருப்பு, என்ற மூன்று விழிகளை விளக்குகின்றன.
10) அதன் படிகள் ஐந்தும் நமசிவய என்ற ஐந்தெழுத்தென உணர்க.
11) பிரகாரத்துள்ள சாளரம் பதினான்கும் வித்தைகள் பதினான்கு என அறிக. அல்லது சாத்திரம் பதினான்கு என்க.
12) ஞானசபையின் இடையில் உள்ள பன்னிரண்டு தூண்களும் பன்னிரெண்டு மெய்கண்ட சூத்திரங்களாகும்.
13) ஞான்சபையின் நடுவேயுள்ள அதிட்டான பீடத்டின் தென் திசையில் உள்ள ஐந்து படிகளூம் சிவ தத்துவங்கள் ஐநதையும் உணர்த்தும்.
அவையாவன :- சிவம். சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்த வித்தை.
மேற்கு, கிழக்கு, வடக்கு, கீழ்நோக்கியுள்ள திருக்களிற்றுப் படிகளாகிய ஐந்து ஐந்து வீதமுள்ள படிகள், சூக்கும பஞ்சாக்கரம், காரண பஞ்சாக்கரம்மகா காரண பஞ்சாக்கரம் முத்தி பஞ்சாக்கரம் என்க.
14) அதிட்டான பீடத்திற்கு இடையேயுள்ள நாற்கால் மண்டபம் ஜோதிஞான பீடமாகும்.
15)ஜோதிஞானபீடத்தின் நான்கு படிகளும், சரியை , கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாதங்களாகும். அதன் வழியேறி அருட்பெருஞ்ஜோதியை யடைய வேண்டும்.
16) ஜோதிஞான பீடத்தின் மீது உள்ள நான்கு தூன்களும், ஞானத்திற் சரியை, ஞானத்திற் கிரியை, ஞானத்தின் யோகம், ஞானத்தில் ஞானம் என்ற ஞான பாதங்களாகும்.
17) அதன் வடதிசையில் உல்ள ஓங்கார வளைவுக்கு இடையில் ஞான வெளியில் அருட்பெருஞ்ஜோதி விளங்குகின்றது.
18) அதனை முறையே
கருப்பு, நீல, பச்சை, சிவப்பு, மஞ்சள், வெண்மை, என்று மறைத்துல்ள ஆறுதிரைகளும்,
ஆணவம், கன்மம், அசுத்தமாயை, மிஸ்ரமாயை, சுத்தமாயை, திரோதம் என்ற ஆறுமாகும்.
மேற்கூறிய ஆறு மறைப்புகளு விலகியவுடன் பிரணவ வட்டத்துள் ஞான பீடத்தின் மீது விளங்கும் தனிப்பெருங்கருணையுடன் கூடிய அருட்பெருஞ்ஜோதி காட்சியளிக்கின்றது..
வடலூர் சத்திய ஞானசபைத் திறப்புவிழா
நினைவுமலர்.