Vallalar Universal Mission Trust   ramnad......
பசிக்கொடுமை


பசிக்கொடுமையை பற்றி வள்ளல் பெருமான் சொல்லுவது போல் இனி ஒருவரும் சொல்லமுடியாது. பசி தவிர்த்தலின் சிறப்பையும் அவர்கள் சொல்லுவது போல் இனி யொருவர் சொல்லமுடியாது. ஆற்றாமாக்களின் அரும்பசிகளையும் பேரறமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கமில்லாதாரைப் பட்டினிகிடப்பாரை பார்க்கவும் நேரீர், பழங்கஞ்சியாயினும் வழங்கவும் நினையீர்’ என்று பாடுவர் ; சாடுவர்.

வட்டி மேல் வட்டிமொள் மார்க்கத்தில் நின்றீர்

வட்டியை வளர்க்கின்றா மார்க்கத்தை அறியீர்

பெட்டிமேல் பெட்டிவைத்தாள்கின்றீர் வயிற்றுப்

பெட்டியை நிரப்பிக்கொன் டொட்டியுள் இருந்தீர்

பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்

பழங்கிஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்

எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோல் கிளைத்தீர்

எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே.

பசி தவிர்க்கும் அறமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தை இங்ஙனமாக சொல்லாலும் பாட்டாலும் எழுத்தாலும் வளர்த்த அடிகள் அதனை செயலில் நடத்திக்காட்ட அமைத்ததே சத்திய தருமச்சாலையாம். ஒளவையாரும், திருவள்ளுவரும் கொலை புலை தவிர்த்தலை நன்றென்று கூரினர். கூறியதோடு நின்றாரேயன்றி அவற்றை நிலை நிறுத்தற்கு அவர்கள் ஏதும் செய்திலர். கூறியதோடமையா து அவற்றை நிலை நிறுத்தற்கு முயன்று பல செயல்களைச் செய்த வடலூரார் போல் வேறு யாருளர். என்று தண்டபாணி சுவாமிகள் பாடுவர்.

கொலையும் புலையும் தவிர்த்தனன்றென் றெளவை கூறியசொல்

மலையிலக் கென் றவள் பின்னேனும் சொற்றனன் மாநிலத்தில்

நிலை பெறச் செய்ய வடலூரன் போல் முயல் நெஞ் சுற்றிலார்

தலையினிற் கங்கைவைத்தோன் அருளோர் ந்த சரதமிதே.

இராமலிங்க அடிகள் வரலாறு

ஆசிரியர் சன்மார்க்க தேசிகன் என்னும்

ஊரன் அடிகள்;

vallalarspace.com/vumt