Vallalar Universal Mission Trust   ramnad......
திருவடிப்புகழ்ச்சி தொடர்ச்சி

2) பரசுகம் தன்மயம் சச்சிதா நந்தமெய்

பரமஏ காந்த நிலயம்

(பதவுரை) : பர சுகம் மாபெரும் பேரின்ப மயமானது : தன்மயம் - என்றும் தன்மயமாக இருப்பது: சத் சித் ஆநந்த மெய் மெய் அறிவு இன்பமேயான மேனியது ; பரம ஏகாந்த நிலயம் எவரும் அறியாத தனி இடத்தது, ( - று)

(விரிவுரை) இடுப்பின் சக்தியை இழக்கச் செய்யும் இகசுக. இச்சொல்லின் நடுவில் உள்ள ககரத்திற்கே துக்கம் என்று பொருள். இது கீழ் நோக்கால் வருகின்ற கேடு. ( இகம் இவ்வுலகம்).

மேல் நோக்கினர்க்குப் பரசிவம், பேரின்பம் ஆகிப் பெருகிவரும்; பர நிதியமாகிப் பலிக்கும், கனிவு மிகுந்து அதைக் கையாளும் காலத்தில், பரசுகம் ஆன்மாவைப்பற்றும், இது, பரம இயற்கை கற்பிக்கும் பாடம்.

பிறர்மயம், பிறவற்றின் மயம் ஆனார்க்கு, வேதனைகளே பெருகி விளையும், அதனதன் மயமாகி அழியாமல் , தன்மயம் ஆனார்க்கு அத் தன்மயம் விளங்கும். தன்மயமா யிருந்து நினைப்பவரைத் தன்மயம் ஆக்குவது,. இறைமையின் எண் குணங்களுள் ஒன்று தன்மயம் என்பது. கற்றதையும் கேட்டதையும் மறந்து, உலகியல் உறவில் இருந்து ஒதுங்கி, மறந்தேன் , ஒதுங்கினேன் எனும் நினைவையும் நீங்கி நிற்கும் நிலை.

சத்தின் சால்பு, சித்தின் சிரிப்பு, ஆநந்த அமைதியெனும் மூன்றுமே அரிய சொரூப அனுபவம். உண்மை அறிவு இன்பம் அல்லது மெய் உணர்வு இன்பம் என்று, மேலோர் இதனில் மேவுவர் ( பொய்ம்மையின் புழுக்கம், அறியாமையின் முழுமை, துக்கத் தோய்வு மூன்றும், இதன் எதிர்மறை என்று எண்ணி ஒதுங்குவர் அவ் இயல்பினர்.

எப்பொருளிலும் அகலம் நீளம் கனம் இருக்கும். அம்மூன்றையும் எவராலும் தனித்தனியே பிரிக்க இயலா! அதுபோல். சத் சித் ஆநந்தம் மூன்றும் ஒன்றில் இருந்து ஒன்று ஒதுங்கா. இம் மூன்ரும் ஒன்றேயாம். ஒன்று , இயற்கை முறுவலிக்கும் அற்புதத்தைச் சொல்வதற்கு இவ்வுலகில் சொற்களே இல்லை.

அகமிதம் தீர்த்தருள் ஜோதி சச்சி

தானந்த ஜோதி சதாநந்த ஜோதி”

என, வேறிடத்திலும் இதன் விளக்கம் வந்துளது.

பலவற்றைத் தழுவும் பான்மையது ஆன்மா. அப்பன்மை நினிவினர்கு, அருமை ஒருமை அகப்படுவது இல்லை. ஒருமை உருவானால் , சிறந்த சிவக்காட்சி சித்திக்கும். அக் காட்சியே பர ஏகாந்த நிலையம் ( பரம அதி சூட்சுமம் ஆன ; ஏகாந்த நிலயம் முடிவில் முடிவான இடம்) , அதற்கு அதுவே ஏகம். அதற்கு முடிபும் அஃதே தான்; அதை ஏகாந்தம் என்றார். இந்த ஏகாந்தம் கண்டார்க்குச் சாகாந்தம் இல்லை.

ஏகாந்தம் ஆகிய ஜோதி என்னுள்

என்றும் பிரியா திருக்கின்ற ஜோதி

சாகா வரந்தந்த ஜோதி என்னைத்

தானாக்கிக் கொண்ட தற்பர ஜோதி”

என்பதை இங்கெண்ணுவது நலம்.

தன்னந் தனிநின் றதுதா னறிய

இன்னம் ஒருவர்க் கிசைவிப் பது வோ அன்பது கந்தர் அனுபூதி.

திருவருட்பா திருவடிப்புகழ்ச்சி,

குகத்திரு இரசபதி அடிகள்

vallalarspace.com/vumt