Vallalar Universal Mission Trust   ramnad......
அடிகளார் பாதை!

அடிகளார் பாதை!
இராமலிங்க அடிகளார், தாம் நடத்திய சீர்திருத்த இயக்கத்தினை, தெய்வம் உண்டு என்ற அடிப்படியில் எழுப்பினார். அந்தத் தெய்வத்தை வழிபட்டு உய்யவேண்டும் என்பதனையும் நடைமுறைத் திட்டமாக வைத்தார். இராமலிங்கரிடம் பக்தி அல்லது அன்பு செலுத்தும் பகுத்தறிவாளர்கள்’ ஒருவனே தேவன்” என்பதனை ஒப்புக்கொண்டால் மட்டும் போதாது, அந்தத் தேவனை ஒழுக்கநெறியில் நின்று வழிபடவும் வேண்டும். வாய்மையைக் கொள்கையளவில் ஒப்புக்கொண்டு அதற்கு மாறாகப் பொய்யே பேசி வாழ்வோருமுண்டு. அதற்கு மாறாகப் பொய்யே பேசி வாழ்வோரும் உண்டு. அதுபோலத்தான் , தெய்வம் ஒன்று உண்டென்பதை ஒப்புக்கொள்வதாகக் கூறிவிட்டு , அதனை வழிபடாது வாழும் தன்மையும் ,
வள்ளலார் , தாம் வணங்கும் தலைவனுக்கு வணங்காத பகுத்தறிவாளர்’ தலைபற்றி பாடுகின்றார்’

வீட்டுத் தலைவ நின் தாள் வணங்கார் தம் விரிதலைசும்

மாட்டுத் தலைபட்டி மாட்டுத் தலைபுன் வராகத்தலை

ஆட்டுத் தலை வெறி நாய்த்தலை! பாம்பின் அடுந்தலைகற்

பூட்டுத் தலைவெம் புலைத்தலை! நாற்றப் புழுத்தலை!

இறைவனை நம்புவதாகச் சொல்லிவிட்டு அவனை நாள்தோறும் வழிபட மறுபாரின் தலையை,

கம்மாட்டுத்தலை
பட்டிமாட்டுத் தலை,
கொடிய பன்றித் தலை,
ஆட்டுத் தலை,
வெறிநாய்த் தலை
நஞ்சுடைய பாம்புத் தலை
கற் பூட்டுத் தலை,
புலைத்தலை,
புழுக்கள் நெளியுந்தலை’
என்றெல்லாம் பாடுகின்றார். இப்படிப்பாடும் வள்ளலாருக்கும் அன்றாட வாழ்வில் இறைவனை வழிபட மறுப்போருக்கும் என்ன உறவோ?
தெய்வத்தை நினைக்க மறுக்கும் நெஞ்சுடைய மக்களைப்பற்றி மேலும் பாடுமிடத்து.

ஓங்கிய திருச்சிற் றம்பலமுடைய

ஒருதனித் தலைவனே என்னைத்

தாங்கிய தாயே தந்தையே குருவே

தயாநிதித் கடவுளே நின்பால்

நீங்கிய மனத்தார் யாவரே எனினும்

அவர் தமை நினைத்தபோ தெல்லாம்

தேங்கிய உள்ளம் பயந்தனன் அது நின்

திருவுளம் அறியுமே எந்தாய்”

என்றுபாடி, இறைவனிடம் முறையிடுகின்றா, தெய்வம் ஒன்று உண்டு என்பதை நம்ப மறுப்பதோ, நம்பிய பின்னும் வழிபடத் தவறுவதோ, மனிதத் தன்மைக்கு மாறுபட்ட செயல்களே, அவற்றைவிடக் கொடுஞ்செயல் தெய்வத்தை நிந்திப்பதாகும், இந்தப் புண்ணியர்களை பற்றி வள்ளலார் பாடுகின்றார்;
பரம் ஏது வினைசெயும் பயன் ஏது பதிஏது
பசு ஏது பாசம் ஏது
பக்தி ஏது அடைகின்ற முத்தி ஏது அருள் ஏது
பாவபுண்ணி யங்கள் ஏது
வரம் ஏது தவம் ஏது விரதம் ஏது தொன்றும் இலை
மனம் விரும்புணவுண்டுநல்
வத்திரம் அணிந்து மட மாதர் தமை நாடி நறு
மலர் சூடி விளையாடிமேல்
கரமேல விட்டு முலை தொட்டு வாழ்ந் தவரோடு
கலந்து மகிழ்கின்ற சுகமே
கண்கண்ட சுகம் இதே கைகண்ட பலன் எனும்
கயவரைக் கூடாதருள்
தரமேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமனி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே!

இப்பாடலின் பொருள் கொஞ்சம் கடுமையானது தான், இனிய உளவாக இன்னாத கூறல், கனியிருப்பக் காய்கவர்ந்தற்று” என்று பாடிய வள்ளுவரே , நாத்திகர்களைப்’ பேயுடன் ஒப்பிட்டுக் கூறினாரென்றால் , வள்ளலாரும் அவரைப் பின்பற்றியதில் வியப் பில்லையன்றோ? பயிரில் புகுந்த களைபோல், மக்கள் மத்தியிலே நடமாடுகின்றது நாத்திகக் கூட்டம், பயிரிடம் காட்டும் கருணை காரணமாகவெ களையைப் பறிப்பதில் கருணையின்றி நடக்கிறோம், அதுபோல், உயிர்க்குலத்தின்பால் கொண்ட கருணை காரணமாகவே தெய்வ நிந்தனையாளரைக் கருணையின்றிக் கடிந்துரைத்தார் வள்ளலார்.

தயவு