இப்படியே, இறுக்கம் இரத்தின முதலிய ஒரு முறை தமக்கெழுதிய கடிதத்தில் இராமலிங்க சுவாமிகள் என்று குறிப்பிட்டிருக்க கண்டு.
“ இராமலிங்க சாமியென்று வழங்குவிப்பது என் சம்மதமன்று, என்னை? ஆராவாரத்திற்கு அடுத்த பெயராகத் தோன்றுதலில் , இனி அங்ஙனம் வழங்காமை வேண்டும்.’’ என 28/03/1866ல் தாம் எழுதிய கடிதத்தில் தாம் எழுதிய கடிதத்தில் முதலியாருக்கு அறிவுரை கூறினார்.
இறைவன் தம்முள்ளத்தில் குடிகொண்டு தம்மைப்பாட வைத்ததாக அடிகள் நம்பினார். அதனாலேயே, ‘ அருட்பா ‘ எனத் தம் பாடற் தொகுதிக்கு பெயரிடச் சம்மதித்தார், இதயத்தில், இறைவனிருந்து பாட வைத்தமனாலேயே நரஸ்துதியாக ஒரு பாட்டும் பாடவில்லை, இதனை
“ நடராஜர் பாட்டே நறும்பாட்டு
ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு
சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு
ஜீவர்கள் பாட்டெல்லாந் தெருப்பாட்டு
அம்பலப்பாட்டே அருட்பாட்டு
அல்லாத பாட்டெல்லா மருட்பாட்டு”
எனப்பாடி, தாம் மனிதரைப் பாடாததன் காரணத்தை மறைமுகமாக விளக்குகின்றார். ‘ அருட்பா ‘ த் தொகுப்பு நூல் வெளியானபிறகு,. பாட்டி தொட்டிகளி லெல்லாம் வள்ளலாரின் பாடல்கள் முழங்கின.
Write a comment