Vallalar Universal Mission Trust   ramnad......
அரசியலைத் துறக்காதீர்

அரசியலைத் துறக்காதீர்

சன்மார்க்கர்களெல்லாம் அரசியலுக்குப் புறம்பாக இருக்கும்வரை, அத்துறையில் துன்மார்க்கர்களே ஆதிக்கம் செலுத்துவர், உலகில் அமைதியும் ஏற்படாது. அரசியலில் ஈடுபட்டுள்ள இல்லறத்தார், அத்துறையில் அதிகார வெறிபிடித்தலைவது இயற்கை. அதாவது தேச மக்கள் நலன் கருதிப் பாடுபட்டு, அதன் பலனைத் தாங்களும் துய்க்கவே விரும்புவர். அத்தகையோர் மக்கள் நல் விரும்பும் தொண்டர்களாக இருக்கலாம், ஆனால், தன்னலம் விடுத்த சன்மமார்க்கர்களாக் இருக்கமாட்டார்கள், அரசியல் துறையில் பலன் கருதாது பாடுபடும் சன்மார்க்கர்களின் எண்ணிக்கை அதிகப்படவேண்டும்.

இளங்கோவடிகள் வலிய வந்த அரியாசனத்தைத் துறந்தார். ஆனால் , அரசியல் பணியைத் துறந்தாரல்லர், அவர் இயற்றிய காப்பியம் கொடுங்கோலைஅழித்துச் செங்கோலை நிலைநிறுத்திய அரசியல் புரட்சி வரலாறாகும், ஆம்; உலக இன்பங்களைத் துறந்த ஞானியொருவர், பெண்ணொருத்தி விளைவித்த பெரும் புரட்சியைச் சிலப்பதிகாரக் காப்பியமாகச் சித்தரித்துத் தந்துள்ளார்.

வள்ளுவப் பெருந்தகை, உள்ளத்தால் துறுவுடைய உத்தமப் பெரியாராவார், அப்படிபட்டவரும் திருக்குறள் பொருளதிகாரத்தில் அரசு அழியவேண்டுமென்றும் சபித்துப் பாடுகின்றார்.

ஆதாரம்

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

ம.பொ.சிவனார்.


vijayaraman2008
nandru.
Friday, May 29, 2009 at 06:25 am by vijayaraman2008