Vallalar Universal Mission Trust   ramnad......
தீண்ட முடியாத திருமேனி

தீண்ட முடியாத திருமேனி

கொலையுணர்வுடன் எவனும் வள்ளலாரின் உடலைத் தீண்டியிருக்க முடியாது, அவர் பிரணவ தேகம் பெற்றவர்.

காற்றாலே புவியாலே ககனமத னாலே

கனலாலே புனலாலே கதிராதியாலே

கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே

கோளாலே பிற இயற்றும் கொடுஞ்செயலக ளாலே

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்

மெய்யளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான்

-எனக்கே”

என்னும் பாடலிலே, கொலைக்கருவியாலும், அழிக்க முடியாத உடம்பை இறையருளால் தாம் பெற்றுவிட்டதாகக் கூறுகின்றார். இந்தப் பாடல் வள்ளலார் விஷயத்தில் கோட்சேத்தனம் நடந்திருக்க முடியாது என்பதற்கு சிறந்த அகச்சான்றாகும். வள்ளலாரின் வாய்மையில் நம்பிக்கையுடையவர்கள், இந்தப் பாடல் ஒன்றைக்கொண்டேனும், அவர்விஷயத்தில் கோட்சேத்தனம் நடக்கவில்லை என்பதை நம்புவார்களாக.

3 Comments
P Sujatha
karunaimigu Rajaveer JothiMurgan Avl,
Continue your Good sanmarga informations.Thank u Very for your
all Valuable sanmarga Matters and Vallalar's Good Sanmarga Values informations. Keep it up.Vallalar blessings.
With Vallalar Loving,
AruljothiSujatha
Friday, May 29, 2009 at 01:48 am by P Sujatha
valli ramanathan
We read this songs many times. ( But.......,thanks for giving details like this.) Thank you. ( What is the meaning of KOTSATHANAM? Please explain.
Friday, May 29, 2009 at 06:40 am by valli ramanathan
rajaveer jothimurugan
"கோட்சேக்கள்" பிறக்காத நாடு!
"காந்தியடிகளை அந்தணக் கோட்ஸே ஒருவன் கொன்றான். வள்ளலாரின் முடிவும் அது போன்றதே" என்று ஒரு வதந்தி இருந்து வருகின்றது.
தமிழர் சமுதாயத்தில் முன்னணியிலுள்ள ஒன்றிரண்டு சாதியினர், சமயத் துறையில் வள்ளலாரின் தலைமையை ஏற்று, பழைமையிலே புதுமை காணத் தவறியிருக்கலாம்; தவறினார்கள் என்பதும் உண்மை. அவர்களிலே பெரியவர்கள் சிலர், வள்ளலாரின் புரட்சிகரமான கருத்துக்களைத் தங்கள் வைதிக உணர்வு காரணமாக எதிர்த்திருக்கலாம்; எதிர்த்தார்கள் என்பதும் வரலாறு. ஆனால், வள்ளலாரின் உயிரைக் குடிக்குமளவிற்கு அவர்களுள் யாரும் "கோட்ஸே'யாக மாறியிருக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்பலாம். தமிழருடைய பண்பாட்டில் அழுத்தமான நம்பிக்கையுடையவர்கள் என் கருத்தை ஏற்றுக்கொள்வார்கள்; எதிர்க்க மாட்டார்கள், தமிழகத்தின் வரலாற்றில் ஞானியர்களின் உயிரைக் குடிக்கும் 'கோட்ஸே'க்கள் வள்ளலார் காலத்திலும் பிறக்கவில்லை; இனி, எதிர்காலத்திலும் பிறக்கப்போவதில்லை, இது தமிழனுக்குள்ள தனிப்பெருமை.
Saturday, May 30, 2009 at 00:21 am by rajaveer jothimurugan