உடம்பைக்காப்பாற்று
இறுக்கம் இரத்தின முதலியார் என்பவருக்கு அடிகளார் எழுதிய கடிதங்கள் திரு பாலகிருஷ்ணப் பிள்ளை அவர்களின் திருவருட்பாப் பதிப்பு 5ம் புத்தகத்தில் வெளியாகியுள்ளன. அந்தக் கடிதங்களின் உடலோம்பல் பற்றிக் கூறப்பட்டுள்ள வாசங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
“ தேக முதலான கருவிகளைப் பக்குவமாகப் பாராட்டிக்கொண்டு வரவேண்டும்”
“ தாம் தம்முடைய தேகத்தை அதி சாக்கிரதையாக உபசரித்து வரவேண்டும். சாக்கிரதை என்பது அருந்தல் பொருந்தல்களில் மிதபோசனம் மிதபோகம்”
“ புண்ணியப் பயனாற் பெற்ற தேகத்தை கூடியவரையில் சாக்கிரதையோடு பக்குவமார்க்கத்தில் நடத்தல் வேண்டும்”
“ தாம் உலகியற்கண் ஒழுகுங்கால் கழிநடை ஒருவன் கட்பார்வை போன்றொழுகல் வேண்டுமென்றும் பிரார்த்திக்கின்றேன். அன்றி உணவு உறக்கம் முதலியவற்றால் உடம்பை மெல்லென நடத்தல் வேண்டும். இஃதென் வேண்டுகோள்”.
“ தாம் தேகம் முதலிய கருவிகளைச் செவ்வினிறுத்தி நடத்தவேண்டுமென்று எழுதுவது தவிர வேறொன்றும் எழுதுவது அவசியமாகத் தோன்றவில்லை.”
மேற்குறித்த வாசகங்களில் “ தேகம் : என்று மட்டுமே சொல்லாமல் “ தேகம் முதலிய கருவிகளை” என்று சொல்லியிருப்பதால் உடல் உறுப்பு ஒவ்வொன்றையும் காத்தோம்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவாராயினார்.
சிதம்பரம் இராமலிங்கம்
Write a comment