மனித தேகம் மற்ற ஜீவதேகம் போல இலேசில் எடுக்கக் கூடுவதில்லையாதலாலும், 1. மனித தேகத்தில் ஆன்ம விளக்கமும் அருள் விளக்கமும், மிகவும் விளங்குவதாலும், 2. இந்த மனித தேகம் போனால், மீளவும் இந்தத் தேகம் வருமென்கிற நிச்சய மில்லாமையாலும், 3. இந்த மனித தேகம் முத்தி இன்பம் பெறுவதற்கே எடுத்த தேகமாதலாலும், 4. இந்த மனித தேகமாத்திரமே முதற் சிருஷ்டி தொடங்கிக் கடவுள் சம்மதத்தால் சிருஷ்டிக்கப்பட்ட உயர்ந்த அறிவையுடைய தேகமாதலாலும் 5. மனிதர்கள் மாத்திரம் பசியாற்றுவிக்கின்ற ஜீவகாருண்ய விதியைப் பொதுவில் அவசியம் உறுதியாகப் பிடிக்க வேண்டுமென்றும், கடவுள் விதித்திருக்கின்ற படியால், பசியை ஆகாரத்தினால் நிவர்த்தி செய்விக்கின்ற ஜீவ காருண்ய ஒழுக்கம் மனிதர்களிடத்தே பெரும்பான்மை நடத்தவேண்டுமென்று அறியவேண்டும்.
-சிதம்பரம் இராமலிங்கம்
Write a comment