Vallalar Universal Mission Trust   ramnad......
புருஷார்த்தங்கள்

மனிதனுக்கு அறம், பொருள், இன்பம், வீடு என நான்கு புருஷாத்தங்களைக் கூறினர், பெரியோர். நான்காவதாக உள்ள வீடுபேற்றினைப் பெற விரும்பும் சன்மார்க்கிகளுக்குத் தனியாக நான்கு புருஷார்த்தங்களைக் தெளிவுபடுத்தினார் வள்ளலார்.

நாம் பெறும் புருஷார்த்தம் நான்கு அவையாவன; ஏமசித்தி , சாகாக்கல்வி, கடவுள் நிலையறிந்து அம்மயமாதல், தத்துவ நிக்கிரகம்.

இவை பெறுவதற்கு ஒழுக்கம் யாதெனில் ( அது ) நான்கு வகைப்படும் 1. இந்திரிய ஒழுக்கம் 2. கரண ஒழுக்கம் 3. ஜீவ ஒழுக்கம், 4. ஆன்ம ஒழுக்கம்.

சாகாக் கலையைப் பயில விரும்பும் சன்மார்க்கப் பாதையில் யாத்திரை செய்யும் ஒவ்வொருவரும் சிந்திக்க தக்க சில செய்திகளையும் கூறியுள்ளார், வள்ளலார்.

யாரிடத்தில் தயவு அதிகப்பட்டிருக்கின்றாதோ. அவரிடத்தில் கடவுளிருக்கின்றார். அந்தத் தயையில்லாதவர்களிடத்துக் கடவுள் இருந்து மில்லாமையாய் இருக்கின்றார். ட்ச்f கடவுளிடத்தில் சதா அன்பும் பக்தியும் செலுத்தவேண்டும்.

பிரும்ம ஞானத்தால் என்றுமழியாத ஸ்வர்ண தேகம் ( பொன் மேனி) பெற்றவன் சாகமாட்டான் என்பதோடு அவன் கடவுள் மயமாகிறான்.

எந்த ஜீவர்களிடத்தில் தயாவிருத்தியாகிய அருள் விசேஷம் விளங்குகின்றதோ, அந்த ஜீவர்களிடத்தில் கடவுள் விளக்கம் விசேஷமாயிருக்கும் மற்றவ்ர்களிடத்தில்காரியப்படாது. ஆதலால், மல ஜல சங்கல்ப காலங்கள் தவிர மற்றக் காலங்களில், கடவுளிடத்தில் அன்பும், ஜீவர்களிடத்தில் பக்தியும் செலுத்தவேண்டும். ஆதலால் பக்தியென்பது மன நெகிழ்ச்சி, மனவுருக்கம் அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி, ஆன்மவுருக்கம்.

எல்லா உயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதலே யீசுவர பக்தியாம்..

இதே கருத்தை காந்தியடிகளும் வலியுறுத்துகின்றார்/.

ஈசன் மேலே எங்கேயோ வானுலகத்தில் இருக்கின்றார் என்றாவது அல்லது கீழே எங்கேயோ பாதாளத்தில் இருக்கின்றார் என்
றாவது சொல்லுவது மடமை நாம் அறியும் ஒவ்வொரு உயிரிலும் அவன் இருக்கின்றான்.