Vallalar Universal Mission Trust   ramnad......
சன்மார்க்க சங்கமும் உயிரிரக்கமும்



முதலில் வள்ளலாம் வேதம் என்ற சொல்லை எல்லா சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவு நூல்” என்னும் பொருளில் பயன்படுத்தினார். உண்மையான வேதங்களின் மறைகளின் சாரம் சன்மார்க்கம்’ என்பது அவர் கண்ட முடிவு. எந்த ஒரு குறிப்பிட்ட பேதங்களை ஏற்கும், வளர்க்கும் எந்த வேதத்தையும் அவர் சத்திய வேதமாக ஒப்புக்கொள்ளவில்லை. பின்னால் வேதம் என்னும் சொல்லை குறுகிய பொருளில்’ சிலர் பயன்படுத்துவதால் அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ளத் தயங்கலாமென்று கருதியதைப் போல அதற்குப் பதிலாக சுத்த என்னும் சொல்லைப் பயன்படுத்தினார்.

தூய்மையைக் குறிகின்ற சுத்தம் என்னும் சொல் அனைவருக்கும் பொதுவானதாகும். திருவள்ளுவர்

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையாற் காணப் படும்”

என்று கூறியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். பெரும்பாலான சமயவாதிகள் புறத்தூய்மைக்கே முதலிடம் கொடுத்து, அதனைக்கட்டிக் காக்க சடங்குகளையும், ஆசாரங்களையும் மிகுதியாக வலியுறுத்தினார், இதனால் மக்களூக்கிடையில் வேறுபாடுகள் வளர்ந்தன. வள்ளலார் அகத்தூய்மையை வளர்க்கும் கருவியாக, தான் அமைக்கும் சங்கம் செயல்படவேண்டுமென எண்னியதால் சுத்த என்னும் சொல்லை சங்கத்திற்கமைந்த அடைமொழிகளில் ஒன்றாகக் கொண்டார்.

வள்ளலார் கண்ட சன்மார்க்கம் அருள்வழியான, மண்ணுயிரெல்லாம் தன்னுயிராக எண்ணி ஓம்புகின்ற ஜீவகாருண்ய நெறியாகும்( இதன் விளக்கம் இரண்டாம் அத்தியாயத்தில் விரிவாகக் கூறப்பெற்றுள்ளது)

சங்கத்திற்கு சத்திய என்ற அடைமொழி இந்தச் சங்கம், மற்றைய சங்கங்களிலிருந்து மாறுபட்டது என்பதைக் குறிக்கின்றது. நித்தியமான முக்காலத்தும், நிலையற்று நிற்கின்ற ஒன்றே சத்திய மாகும். இறைவனை ‘சத், சித், ஆனந்தமாக” நமது முன்னோர்கள் கண்டனர். சத்தியம் என்னும் வடசொல்லில் பொருளை உண்மை’ வாய்மை’, வாய்மை’ , ‘மெய்ம்மை’ என்னும் மூன்று தமிழ்ச் சொற்களும் தருகின்றன. ‘உண்மை’ என்பது உள்ளத் தூய்மையையும் வாய்மை என்பது பேச்சில் தூய்மையையும் ( பொய்யாமையையும்) மெய்மை’ என்பது உடல் செயல்தூய்மையையும் குறிக்கின்றன. சிந்தனையிலும் , சிந்தனையை வெளியிடுவதிலும் செயல்படுவதிலும், சத்தியம் ஒளிவிட வேண்டும். அத்தகைய தூய்மையாளர்களின் கூட்டத்தை சங்கத்தை உருவாக்கவே வள்ளலார் விழைந்தார்.

.தொடரும்