சமரச சுத்த சன்மார்க்கம் என்ற தனது தத்துவத்தை அடைவதற்கு முன்னர் அவர் பல தத்துவங்களையும் சமயங்களைவிட ஆராய்ந்து அனைத்து தத்துவங்களுக்கும், சமயங்களுக்கும் அடிப்படையில் அமைந்த உண்மைகளை உணர்ந்தார். இந்த தத்துவங்களையும் சமயங்களையும் மனிதன் கடக்கவேண்டிய படி நிலைகள் என்பதையும் மனிதன் நிலை இவைகளுக்குமேல் உயர்ந்தத்டு என்பதையும் உணர்த்தவே ‘ சுத்த’ சன்மார்க்கம் என்று பெயரிட்டார்.
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உலகு காண இராமலிங்க அடிகளார் பாடிய பாடல்கள் பலவற்றை திரு அருட்பாவின் ஆறாம் திருமுறையில் காணலாம். ஆறாம் திருமுறையி வெளியிட (அச்சிட) அவர் அனுமதிக்கவில்லை. அது சன்மார்க்கத்தை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் தொண்டர்களுக்கு மட்டும் என ‘ மறைமுக போதனைகளாக’ அவர் வைத்திருந்தார். அது அவர் வாழ்ந்த கால சூழலின் விளைவு. அவற்றைப் புரிந்து கொள்ள முயன்றவர்களை விட கண்மூடித்தனமாக எதிர்த்தவர்கள் அதிகமாக வாழ்ந்த காலம்.
/…தொடரும்