Vallalar Universal Mission Trust   ramnad......
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை

ஒருமைப்பாடு இல்லாத காரணத்தால் மனிதன் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றான். பல ஒருமைப்பாடுகளைப் பற்றி பேசிவரும் நாம் அவைகளை செயல் முறையில் செய்யாத குறையால் துன்பமடைந்து வருகின்றோம். சமய, பொருளாதார, சமுதாய, தேசிய, மொழி இப்படியாக பல ஒருமைப்பாடுகள் இன்று பேசப்பட்டு வருகின்றன. இவைகளுக்கு அடிப்படையான ஆன்மநேய ஒருமப்பாட்டினை இராமலிங்க அடிகளார் சமரச சுத்த சன்மார்க்கம் என்ற அவருடைய தத்துவத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மனிதன், வெறும், தசைக் கூட்டின் மொத்த உருவம் அல்ல. அவனிடம் உள்ள அழியாத, என்றும் உள்ள உண்மையே மனிதனை மனிதன் ஆக்குகின்றது. எல்லா உயிர்களிடத்திலும் உள்ள இந்த உண்மை, மனிதனிடன் உயர்ந்த நிலையில் உள்ளது எவ்வளவோ வளர்ச்சிக்குப்பின் மனிதன் தன் உணர்வுபெற்று குறிப்பிட்ட நிலைக்கு வளர்ந்துள்ளான். இனி வளர வேண்டியவை இறை உணர்வு, உண்மை உணர்வு உள்ளதன் உணர்வுகள் ஆகியவைகள் உள்ளன. இப்படி வளர்ந்துவளர்ந்து வரும் உண்மையே ‘ஆன்மா’ உயிர்’ என இந்திய தத்துவத்தில் குறிப்பிடுகின்றனர். இதன் அடிப்படையில் உறாவுகள் அமையவேண்டும். அப்படி அமையும் உறவுகள் உரிமைகளாகவும் பரிணமிக்கும் என இராமலிங்க அடிகளார் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்ற கருத்தின் மூலம் வலியுறுத்துகின்றார்.

தொடரும்..