ஜீரணம்
அன்னத்தை மூன்று மணி நேரத்திற்குள் அதிலுள்ள திரவாம்சத்தை பிரித்து (உதிரமாக்கி) இரத்தமாக்கி ஊட்டுகின்றது.மூன்றுமணிநேரத்திற்குமேல் மேற்படி சக்கையை மலபாகத்தில் தள்ளிவிடுகின்றது. இதுபோல் எந்த உணவுப்பொருளையும் பிரிக்கின்றது. ஆதலால், ஆகாரங்கொண்ட மூன்றுமணி நேரத்திற்கு மேல் ஆகாரங்கொள்ளவேண்டும்.
வள்ளலார்.
உடம்பின் அருமை
இந்த உடம்பை அலக்ஷியம் பண்ணாமல் பொன்னைப்போல் பார்க்கவேண்டும்.
வள்ளலார்
முக்குணம்
தானாக நிற்றல் சத்துவகுணம் (நற்செயல்களையே செய்யத்தூண்டுவதான குணம்) இராகதுவேஷ(வெறுப்பு, பகைமை)சம்பந்த முடையது இராஜசம், சோம்பலாதி ஜீவ இம்சைக் கிடனாவது தாமசம்.
வள்ளலார்
மூன்றாசை
சுத்த சன்மார்க்க லக்ஷிய அனுபவ விருப்பமுடையவர்களுக்கு நனவினும் மண்ணாசை, கனவினும் பெண்ணாசை, சுழுத்தியினும் பொன்னாசை முதலிய மூன்றும் கூடாவாம்.
வள்ளலார்
கோபம்
சினம், வெகுளி, என்பவற்றின் பொருள் சினம் உள்வேக்காடு, புடநியாயம் போல், இது தேகத்தை சீக்கிரம் நஷ்டஞ் செய்யும், வெகுளி, மீசை துடித்தல், கண்சிவத்தல் , கைகால் உடம்பு துடித்தல் முதலாகியவற்றை வெளிபடையாக காட்டுதல் இதுவும் ஆயுளை நஷ்டஞ்செய்யும். ஆகையால் எந்தவகையிலும் கோபங்கொள்ளக் கூடாது. அதை அவசியம் ஒழிக்கவேண்டும். காமக்குரோதிகள் முதலிய பெருங்குறைகளை அவசியம் நீக்கவேண்டும்.
வள்ளலார்.
சமரச சுத்த சன்மார்க்க சத்திய விவேக விருத்தி
மாத இதழ்