சமரச சன்மார்க்க சங்கம் – 1865
திருவருட்பா வெளீயீடு 1867 ( நான்கு திருமுறைகள்)
சத்திய தருமச்சாலை 1867
சித்திவளாகம் 1870
சத்திய ஞானசபை 25.01.1872
சன்மார்க்க கொடி 22.10.1873
சித்திபெற்றது 30.01,1874
திருஅருட்பா ஐந்தாம் திருமுறை முதல் பதிப்பு 1880
திரு அருட்பா ஆறாம் திருமுறை முதல் பதிப்பு 1885
வள்ளலார் காலம்
அரசியல்
ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் நிலை பெறல்
1857 இந்திய விடுதலைப்போர்
சமுதாயம்
பிளவுபட்டு – பாழ்பட்ட சமுதாயம்
சாதிப்பிரிவுகள்
மூட நம்பிக்கைகள்
பெண் அடிமை
சமயம்
இந்து சமயத்தின் வீழ்ச்சி
கிறிஸ்த்துவத்தின் வளர்ச்சி
சமயச் சண்டைகள்
பொருளாதாரம்
ஆங்கிலேயர் சுரண்டல்
தொழில் நாகரிகத்தின் தீமை
வறுமையும் பஞ்சமும்
கல்வி
அறியாமை
ஆங்கிலக் கல்வியின் கேடு
புதிய போக்குகள்
புதிய எழுச்சி, சங்கங்கள், கட்சிகள் தோன்றல்
இராசாராம் மோகன்ராய் (1774 – 1880)
தயானந்த சரஸ்வதி (1824 – 1853)
இராமகிருஷ்ண பரமஹம்சர் ( 1836 – 1885)
சுவாமி விவேகானந்தர் ( 1863 – 1902)
உலக நிகழ்ச்சிகள்
ஐரோப்பாவில் தேசியம், சுதந்திரம் முதலிய கருத்துகளின் வளர்ச்சி
காரல்மார்க்ஸின் சித்தாந்தம்
சில சிந்தனைகள்
வள்ளலாரின் வாழ்க்கை வரலாறுகள் பெரும்பாலும் வழிபாட்டு உணர்வுடன் எழுதப்படுவதால் வரலாற்று நோக்கிலான ஆராய்ச்சி அத்தகு வரலாறுகளில் மிகவும் குறைந்தே உள்ளது. வரலாற்று நோக்கிலான சிலசிந்தனைகள் இங்கு தரப்படுகின்றது.
வள்ளலாரின் தந்தையாருடைய முதல் ஐந்து மனைவியர் இறந்தனர் என்ற செய்தி மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இந் நிகழ்ச்சியும், எட்டாவது மத்ததிலேயே தந்தையை இழந்த அவரது தாயின் ( தந்தையின் ஆறாவது மனைவி) விதவைக் கோலமும் வள்ளலார் மனதை பெரிதும் பாதித்திருக்கவேண்டும். மரபான இந்திய திருமண முறையை எதிர்த்து அவர் செய்த பெரும் புரட்சிக்கு இதுவே அடித்தளமாக அமைந்தது எனலாம். திருமணத்தில் ஆர்வமற்று இருந்த அவர். திருமணத்திற்குப் பின்னர் மனைவியை காமப் பொருளாகவோ, ஏவல் அடிமையாகவோ, உடைமையாகவோ கருதாது ஒரு சகோதர மனித ஜீவனாக மதித்துப் போற்றும் நிலையைக் காண்கிறோம்.
ஆங்கிலக் கல்வியிலும் முறையான பள்ளிக் கல்வியிலும் அவர் ஆர்வமற்று இருந்தார். அவை அவருக்குப் பெருஞ்சுவையாக இருந்தன. இன்று “ பள்ளி மறுப்பு”: ( (Deschooling) ஒரு புதிய கருத்து உருவாகி வருவதைக் காண்கின்றோம். மேற்கத்திய கல்வி முறையை எதிர்த்த முதல் சிந்தனையாளர் வள்ளலார்தான். 19ஆம் நூற்றாண்டு இந்திய சீர்திருத்தச் சிந்தனையாளர் பலரும் மேலைக் கல்விமுறையை ஒரு புதிய மறுமலர்ச்சி யுகத்தின் தொடக்கம் என வரவேற்றதையும் நாம் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும். “ பள்ளி மறுப்பு “ சிந்தனையின் தந்தை என வள்ளலாரை நாம் கருதலாம். வள்ளலார் ஓதாது உணர்ந்தார். தமக்கென தாமே புதிய பாதை வகுத்துக் கொண்டார்.
வள்ளலார் வாழ்க்கையில் தெளிவான பரிணாம வளர்ச்சி காணப்படுகின்றது. முருகனை வழிபடும் நிலையிலிருந்து அனைத்து உயிர்களையும் ஒருங்கிணைத்துக்காணும் ஆன்மநேய ஒரு மையப்பாட்டை அநுப நிலையில் உணரும் உயர்வடைகிறார். அதே நேரத்தில் சமுதாயத் தொண்டு, சீர்திருத்தம், புதிய உலகம் காணும் செயல் திட்டம் முதலியவற்றையும் சிந்தனையிலும் செயலிலும் வெளியிடும் போக்கு வளர்ந்து செல்கிறது. வள்ளலார் ஆன்ம நெறியாளர். சிந்தனையாளர், புரட்சியாளர், செயல் வீரர், பசிப்பிணி நீக்க அவர் செய்த தொண்டு வரலாற்றின் தொடக்கமாகும். இது மட்டுமல்ல சிந்தனைகளையும் செயல் திட்டங்களையும் நிரந்தரமாக்க நிறுவிய பெருமையும் அவரைச் சேரும். எனவே அவர் பிற சமயச் சிந்தனையாளர்களிடமிருந்து மாறுபட்டு, தனக்கென புதுவழி கண்டவராக அமைகிறார். தமிக, இந்திய . உலகச் சூழ்நிலைகளை வெகு ஆழமாக அறிந்தவராக அவர் காணப்படுகிறார். கரை கடந்த கல்வி ஞானமும் தீர்க்க தரிசனமும் அவரிடம் காணப்படுகின்றது. காலத்தை வென்று நிற்கும் அவரது இலக்கியம் இவ் உண்மையை உணர்த்தும், அவர் எங்ஙனம் கற்றார்? கருவிலே அவர் திருவுடையவர் என்பதில் ஐயமில்லை.; ஓதாது உணரும் பாங்கும் அவரிடம் இருந்தது. வாழ்க்கை முழுவதும் இடைவிடாது கற்று வந்த அவரின் அறிவுத் திறனை வியக்காமல் இருக்கமுடியவில்லை. ஆனால் அவர் எங்ஙனம் கற்றார் என்பதை முழுமையாக விளக்கக்கூடிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை.