Vallalar Universal Mission Trust   ramnad......
தைப்பூச பெருவிழா நிகழ்வுகள்

வடலூரில் தைப்பூச பெருவிழா இனிதே நடந்தேறியது அன்னதானம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த தைப்பூசநன்னாள் விடுமுறை நாளாக இருந்ததால் பெருமளவில் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .வெளிநாட்டினரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனேகமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலிருந்தும் சன்மார்க்க அன்பர்கள் கலந்துகொண்டார்கள்.

வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்டில் அன்னதானம் மிகச் சிறப்பாக மூன்று நாட்கள் நடைபெற்றது. சுமார் மூவாயிரம் பேருக்குமேல் உணவு வழங்கப்பட்டது.

விழாவில் இராமநாதபுரம் மாவட்ட தங்கல் மனையில்

மலேசிய அன்பர் டாக்டர் என். விநாயகமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர்.

சுவிட்சர்லாந்தைச்சேர்ந்த திரு கேத்தீஸ்வரன் குடும்பத்தினர்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திரு அன்புஜோதி (திரு பால் மெஸ்ரோபியன்)

ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

பாபநாசம் அய்யா சிவாசுவாமிகள் அவர்களும் வருகை தந்திருந்தார்கள்.

மேலும்

சேலம் சாது முத்தையா அவர்கள், சேலம் டாக்டர் துரைசாமி அவர்கள்

மற்றும் டாக்டர் குப்புசாமி அவர்களும் வருகை புரிந்தார்கள்.பேராசிரியர் வை. நமச்சிவாயம் அய்யாஅவர்கள்

திரு இராமானுஜம், துணை ஆட்சியர் ஓய்வு , மதுரை , அவர்கள் தலைமையில் சத்விசார நிகழ்வுகள் நடைபெற்றன.

கலந்து கொண்டவர்கள்.

திரு வி.எஸ். இராமதாஸ் அய்யா அவர்கள் , ராம் கார்த்தி பாலிமர்ஸ் உரிமையாளர்,கோயம்புத்தூர்.

மற்றும் திண்டுக்கல் சன்மார்க்க பெரியவர்கள் மற்றும்

திரு சதீஷ் பி.இ., சென்னை,

திரு கோயம்புத்தூர் சிவக்குமார்

திரு பிரபாகர் கோயம்புத்தூர்

திரு சாய் கணேஷ் , மதுரை

மற்றும் பொதட்டூர் பேட்டையை சேர்ந்த சன்மார்க்க அன்பர்.

ஆகியோர் சத்விசார நிகழ்வுகளை நடத்தினார்கள்.

மற்றும்

விருதுநகர், அரக்கோணம், திண்டுக்கல், சின்னாளபட்டி, சேலம், பாண்டிச்சேரி, இராமநாதபுரம், சென்னை, தஞ்சாவூர்,திருச்சி, புதுக்கோட்டை

இன்னும் பலமாவட்டங்களைச்சேர்ந்த சன்மார்க்க பெரியவர்கள் வருகைதந்திருந்தனர்.

திரு வடலூர் சிவகுருநாதன் அய்யா அவர்கள் அகவல் உரை விளக்கம் பற்றி

பெரிய ப்ளெக்ஸ் பேனர் மூலம் விளக்கம் அளித்தார்கள். என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்றும் தைப்பூசம் அன்று காலையில் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்டின் சார்பாக ஏழை எளியவர்களுக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் உடைகள் வழங்கப்பட்டன.

மேலும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த திரு அன்புஜோதி (பால் மெஸ்ரோபியன்) அவர்கள் பிரஞ்ச் மொழியில் வள்ளலாரை பற்றி எழுதிய நூல் ஒன்றை வள்ளலார் மிஷன் டிரஸ்ட், இராமநாதபுரம் மாவட்ட தங்கல் மனையில் பார்வைக்காக வைத்துள்ளார். பிரான்ஸ் நாட்டினர் வருகை தந்தால் பயன்பெறுவதற்காக.

மேலும் அரக்கோணம் மாவட்டத்தில் உள்ள வளர்புறம் என்ற கிராமத்தைச்சேர்ந்த சன்மார்க்க அன்பர்கள் சுமார் 50பேர் கலந்துகொண்டார்கள்.

மற்றும் சன்மார்க்க நூல்கள், அருட்பா குறுந்தகடுகள் விற்பனையும் நடைபெற்றது.

தயவு

2 Comments
hariharan_82
Is it possible to conduct such Sath visaram during the ensuing
Thai Poosam festival also ayya ?
It is very interesting to see this.
Wednesday, December 9, 2009 at 20:27 pm by hariharan_82
rajaveer jothimurugan
தயவு வணக்கம்
அய்யா தைப்பூசத்தன்று சத்விசார நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
தயவு வணக்கம்.
Thursday, December 10, 2009 at 00:50 am by rajaveer jothimurugan