Vallalar Universal Mission Trust   ramnad......
வள்ளலாரின் இறைக்கொள்கை…



என்றன்

அப்பனைச் சிற்றம்பலத்து என் அருட்பெருஞ்

சோதியைப் பெற்றேன்’ திரு.6;47;2

இவ் இறைவனிடமிருந்து இப்பெருஞ் சோதியை உயிர்கள் பெற்று உய்தல் வேண்டும், தனக்குச் சோதி வடிவினனாகிய இறைவன் சோதியினை நல்கியதை அவரே மனமகிழ்ந்து கூறுகின்றார்.

அமரரும் முனிவரும் அதிசயித் திடவே

அருட்பெருஞ் ஜோதியை அன்புடன் அனித்தே

கமமுறு சிவநெறிக்கு ஏற்றிஎன் தனையே

காத்து எனது உளத்தினில் கலந்தமெய்ப்பதியே’

திரு.6;10;18

அச்சோதியை பெற்றதால் பயன் என்ன? வெயில் ஒளியால் பொருள்கள் கெடாவாறு பதப்படுத்தப்படுகின்றன. தன்னை அவ்வாறு இறைவன் வேதித்தகை- பதப்படுத்தியதை வள்ளலார் விளக்கிக் கூறுகின்றார்.

தன்னையே எனக்குத்தந்து அருள் ஒளியால்

என்னை வேதித்த என் தனி அன்பே

திரு 6:1:1479 80

இங்ஙனம் வேதிக்கப்பெற்றதால் தாமே அருட்ஜோதி வடிவாகிவிட்டதை அவர் முரசறைந்து அறிவிக்கின்றார்.

அருட்சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு

அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு”

இவையனைத்தையும் தொகுத்துத் தாம் பெற்ற அனுபத்தைக் கூறும் இடமும் உண்டு. தாயாகவும், தந்தையாகவும் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ் சோதியாகிய அமிழ்தத்தைத் தனக்குத் தந்து, அழிவற்தோர், மரணமிலாப் பெருவாழ்வாகிய அருட்பெருஞ்ஜோதிச் செங்கோலும் கொடுத்து அரசாட்சி நல்கியது என வியந்து பாடுகின்றார்,

அருட்பெருஞ்ஜோதி என் அம்மையினோடு அறிவு, ஆனந்தமாம்

அருட்பெருஞ்ஜோதி என் அப்பன் என் உள்ளத்து அமர்ந்து அன்பினால்

அருட்பெருஞ்ஜோதி தெள்ளார் அமுதம் தந்து அழிவற்ற ஓர்

அருட்பெருஞ்சோதிச் செங்கோலும் கொடுத்தனன் அற்புதமே

திரு 118:4

சோதியானது (ஆன்மா) சோதியை (இறையை) நாடி சோதித்துணையால் (அருளால்) சோதியாவதே (இறைமை) அருட்பெருஞ்ஜோதித் தத்துவம். என்று முரசு அறையத் தோன்றுகின்றது.

தொடரும்