Vallalar Universal Mission Trust   ramnad......
வள்ளலார் மதவாதியா? சமுதாயச் சிந்தனையாளரா?

வள்ளலாரும் சமுதாயச் சிக்கல்களும்

-சுப- அண்ணாமலை

வள்ளலார் மதவாதியா? சமுதாயச் சிந்தனையாளரா?

வள்ளலார் மதங்களை ஏற்றுக் கொள்ளாத இறை நெறியாளர் அவரது இறை நெறியாகிய சுத்த சன்மார்க்கம், சமுதாயச் சிந்தனையை உள்ளடக்கியது. சமுதாய முன்னேற்றத்திற்கான சேவையே இறைவனை அடைந்து நுகரும் வழி; எல்லையற்ற இறைவனை, எல்லையற்ற சமுதாய சேவையின் மூலம் பெறும் அருட் காட்சி வாயிலாக உணர்ந்து, அறிந்து, நுகரலாம் என்பது அவர்தம் இறைக்கோட்பாடு. சாதி, மத, சமய, கோத்திர, குல, இன , மொழி, நிற வேறுபாடுகள், உள்ளிட்ட எவ்வித வேறுபாடும் இல்லாத உலக சமுதாய அமைப்பே அவரது சமுதாயக் கோட்பாடு (universal religion and universal society) இங்ஙனம் இறைநெறியும், சமுதாயச் சிந்தனையும் இணைந்த புதுநெறியாளர் வள்ளலார்.