சன்மார்க்கத்திற்கு பிடில், மத்தளம், முதலான விநோதங்கள் வேண்டியதில்லை. மனநெகிழ்ச்சியோடு தோத்திரஞ் செய்வதுதான் வழிபாடு.
ஆண்டவரிடத்தில் வைத்த லஷியம் போய்விட்டால் நீங்கள் அடையப்போகிற பெரிய பிரயோஜனம் போய்விடும், அல்லது அதில் முயற்சி செய்து, அவ்வளவுகாலம் உழைத்தௌ அந்த அற்பபிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால் முக்கிய லாபம் போய்விடும். ஆகையால் அவைகளில் லக்ஷியம் வைக்காமல் ஆண்டவரிடத்திலேயே லஷியம் வைக்க வேண்டியது.
தியானஞ்செய்யவேண்டுமானால் ஏதாவது ஓர் உருவத்தைத் தியானிக்க வேண்டும். நிஷ்களமாயிருக்கப்படாது. உருவமாக இருக்கா வேண்டும், அருவமாகத் தியானிக்கப்படாது. பின் உருவம் கரைந்து அருவமாகும்.
ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கு கலை அறிவை ஒருவன் அருள் முன்னிடமாகச் சுத்த சிவ நோக்கத்தாஅல் அறியத் தொடங்கினால் ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம்.
எந்தக்காலத்தில் எந்த இடத்தில் எந்த விதமாக எந்த மட்டில் எதை அனுபவிக்க வேண்டுமோ அதை அந்தக் காலம் அந்த இடம் அந்த விதம் அந்தமட்டும் பொருந்தப் பொருப்பிக்கின்றது திருவருட் சத்தியா யிருந்தால் நமக்கென்ன சுதந்திரமிருக்கின்றது?
மனிதன் முக்கியமாகப் பெற்றுக் கொள்ள வேண்டியன நான்கு. அவையாவன 1. ஏம சித்திசெய்தல் 2. சாகாத கல்வி கற்றல் 3. கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் 4. தத்துவநிக்கிரகஞ்செய்தல் என்பனவாம்.
நீங்கள் எல்லவரும் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற (நடத்துகின்றா உண்டாக்குகின்ற) தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்ற நல்ல விசாரணையிலிருங்கள்.
காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்து வர விடுத்தவர் ஆணுக்குக் கடுக்கனிடுதலும் பெண்ணுக்கு மூக்குத்தி முதலியவை போடுதலும் தமக்குச் சம்மதமானால் காதிலும் மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வரவிட்டிருக்கமாடாரா? என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளுகிற பக்ஷத்தில் காதில் கடுக்கனிடவும் மூக்கு முதலியவற்றில் நகையிடவும் சம்மதம் வருமா?