ஏன் என்றால், அவைகளில் ஒன்றிலாவது குழு உக்குறியின்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடிய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லவில்லை.
மண்ணைபோட்டு மறைத்துவிட்டார்கள், அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல் பிண்டலஷ்ணத்தை அண்டத்தில் காட்டினார்கள்.
யாதெனில், கைலாசபதி என்றும், வைகுண்டபதி என்றும் பெயரிட்டு இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பது போல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள்.
தெய்வத்துக்கு கைகால் முதலியன இருக்குமா என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள்.
இது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது ,
அப்படியே கண்னை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள்.
ஆனால்
இதை ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன்.
அவன்மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை.
அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை.
…தொடரும்.
Please continue.
Also please try to quote Thirumandiram, Thirukkural alongwith Vallalar's explanation/interpretation on these veda agama purana idikasas.