சத் .. என்கிற தகரம் .. என்கிற … னகரம் மெய்யாக மாறி..சத்மார்க்கம் என்பது .. சன்மார்க்கம் என்று மருவியது.
சத் உண்மை, மார்க்கம் .. துவாரம் அல்லது பாதை.. சன்மார்க்கம் என்பது உண்மையை தெரிவிக்கின்ற மார்க்கம் ஆகும்.
இதனை பொது நெறி அருள்நெறி பெருநெறி ஒளி நெறி, என்றெல்லாம் வள்ளலார் பல அருட்பாவில் விளக்கியுள்ளார் மேலும் தாம் கண்ட சுத்த சன்மார்க்கம்
இன்புறலாம் எவ்வுலகும் ஒத்திட வாழ்ந்திடலாம்
எல்லாம் வல்ல சித்தி இறைமையும்
பெற்றிடலாம் அன்புடையீர் வம்மின்
இங்கே சமரச சன்மார்க்கம் (திரு அருட்பா)
இதோ ! வள்ளற் பெருமானரே அழைக்கின்றார்
இங்கே
அருட்ஜோதி பெருமான் அம்மையும் அப்பனுமாய்
அருளாளராகி அமர்ந்து இருக்கின்றார்
அவரது அருள்பெறவே ஆசையுண்டேல்
வம்மின் இங்கே
(திரு அருட்பா)
வருவா ரழைத்துவாடி
வடலூர் வடதிசைக்கே
வந்தாற் பெறலாம் நல்ல வரமே (திரு அருட்பா)
ஆதியும் அந்தமும் இல்லாதோர்
அம்மலத்தாடும் ஜோதி தன்னை
நினையுங்கள் சுகம் பெறுவீர் (திரு அருட்பா)
எனவே எல்லாம் வல்ல நமது அருட்தந்தை திருவருட்பிரகாச வள்ளற் பெருமான் அனைத்து மக்களையும் வடலூற்பெரு வெளிக்கு சாதி, இன, வேறுபாடு இன்றி சமரச உணர்வோடு, ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையோடு அனைவரையும் அழைக்கின்றார்.
ஆகவே அனைவரும் வந்து வடலூரில் அருள்ஜோதி தரிசனம் வடலூரில் ஆண்டு தோறும் நடைபெறும் தைப்பூசம் பெருவிழாவில் இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து இன்றைக்கு சுமார் 140 ஆண்டுகளாக ஜோதி தரிசனம் கண்டு களித்து மகிழ்கின்றனர் என்பது கண்கூடு! ஆகும்.
ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை
நாடாதீர் பொய் உலகை நம்பாதீர் வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினி இங்
கென்மார்க்க மும் ஒன்றாமே. (திரு அருட்பா)